Madukkur
பொது செய்தி - General

80ஸ் 90 ஸ் பெருநாள் தொழுகை

நெஞ்சத்தில் நீங்காத, நெஞ்சாற குடிகொண்டிருக்கும், 80ஸ் 90 ஸ் பெருநாள் தொழுகை .

மாலை நேர அஸர் தொழுகைக்கு பிறகு நாளை பெருநாள் என்ற பேச்சு மக்களின் மனங்களிலிருந்து ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம்  பகிர்ந்து கொண்டு பெரியபள்ளிவாசல்  ஜாமி- ஆ  தொழுகை நேர அறிவிப்புக்காக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

மஃரிப் தொழுகைக்கு பிறகு மைக் மூலியமாக பெருநாள்  அறிவித்து விடுவார்கள். அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு தெருவும் மிகுந்த பரபரப்பாக காட்சியளிக்கும்.

மளிகைகடை ஜாமான் வாங்குவது, என ஆண்களும், மருதாணி மற்றும் உணவு பொருட்கள் செய்வது சம்மந்தமாக பெண்களும் என பரபரவென்று வீட்டு வேலையை செய்ய தொடங்கி விடுவார்கள்.

மறுபுறம் தையற்கடையில் தைக்க கொடுத்த சட்டை வாங்குவதற்கு அனைத்து தையல்கடைகளும் மும்முரமாக தைத்து கொண்டு இருப்பார்கள். சில கடைகளில் தம்பி கைய வெட்டிடட்டேன், கழுத்த வெட்டிடட்டேன் ரெண்டையும் சேர்க்கணும் ,பட்டன் மட்டும் இன்னும் வைக்கல, ஒரு அரைமணிநேரம் கழிச்சி வாடா தம்பினு பெரும்பாலான கடைகளில் இதே போன்று நிலவும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான டைலர்கள் பிடித்தமானவர்கள்.

மறுபுறம் மளிகைகடையில் ரோக்கா கொடுத்துட்டு ஜாமான போட்டுவைங்க வந்து எடுத்துகிறேனு,     ஜவுளிகடைல கையலி எடுக்குறதுக்கு கூட்டம் அலைமோதும். சங்குமார்க், குதிரைமார்க், கைலிகள் மிகவும் பெயர்பெற்றவை .

அதனை முடித்துவிட்டு , மளிகைகடை டைலர்கடை என இரவு 10 to 11- மணிக்குள் நிறைவடையும்.

அதிகாலை 4- மணியளவில் தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு, பெரிய சகோதரர்கள் தங்களது  வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீப்பந்தத்தில் ஊதுவதும் என வீரசாகசத்துடன்    ஏரிக்கரைக்கு குளியல் பயணம்  சென்று வருவது, பிறகு காலை முதல் காய்கறி, கறி வாங்குவது என அடுத்த பரபரப்பு தொடங்கும் .கறிகடைகளில் அவ்வளவு எளிதில் கறி கிடைக்காது. காத்திருந்து வாங்கி செல்வோம்.

பெருநாள் தொழுகை காலை 9- மணிக்கு  தொடங்க இருக்கும் .8- மணி முதலே ” தக்பீர்” ஓத தொடங்கி விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தெருவிலிருந்தும் நண்பர்கள் பட்டாளத்துடன் வருகை தர தொடங்குவார்கள்.

புது கைலி மடமடவென்று , ஸ்டிக்கர்கள் பாதி கிளித்த நிலையிலும் கிளிக்காத நிலையிலும் நடந்து வருவார்கள்.

பெரிய பள்ளிவாசலில் முகப்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறது M.C.C. கிரிக்கெட் கிளப் என்ற பேனர் வரவேற்கும்.அகலில் ஒது செய்வதற்கு ஒவ்வொரு   கல்லிற்கும் 4- பேர் காத்துகொண்டு இருப்பர். தோட்டத்துக்குள்ளும் மாடியிலும் பெரிய பெரிய மைக்குகள் கட்டி , அறிவிப்பு வந்தவண்ணம் இருக்கும். அகலில் ஒது செய்பவர்கள் விரைந்து எடுக்குமாறும் தொழுகை 9- மணிக்கு தொடங்கும் என.

உள்பள்ளி, இப்தார் ஹால், ராத்தீபு  ஹால், என பள்ளி ஜன நெருக்கடியால் பூப்பரித்து காணப்படும். சிறுவர்கள் மாடியில் ஏறிகொண்டு கீழிலிருந்து ஐஸ் வியாபாரியிடம் வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

தொழுகை துவா,முடிந்தவுடன் மிக பெரிய சந்தோஷமான அளமளிப்பு தொடங்கும்.

வெளிநாட்டிலிருந்து  வந்தவர்கள் பெரிய சந்தோஷத்துடன் விசாரிப்பார்கள். கூட்டம் கலைவதற்கு 1- மணி நேரம் ஆகிவிடும். முக்கத்திற்கு முக்கம் குரூப்குரூப்பாக நின்று பேசி கொண்டு இருப்பார்கள்.

வீட்டிற்கு சென்று அம்மாவிடம், பாட்டியாக்களிடம்  ஸலாம் சொல்லி பெருநாள் வாழ்த்து பெறுவது , அது மிக பெரிய மனசந்தோஷத்தை கொடுக்கும் .

ஒரு பக்கம் உற்றார் உறவினர்கள் நம் வீட்டிற்கு வருவதும் , நாமும் போவது என தொடங்கும். 50காசு 1- ரூபாய் என பெருநாள் காசுகள் கொடுக்க தொடங்குவார்கள். காலை உணவு முடிஞ்சதும் நண்பர்களுடன் “வாடகை சைக்கிள் ” எடுத்துகொண்டு  பலூன் கட்டி கொண்டு  ஊரை உலாவருவது , பெருநாள்கொல்லையை அமளியுடன் சுற்றுவதுமாக இருக்கும். மாலை நேரங்களில் பெருநாள்கொல்லையில் ஆப்பிள் பலுன்களையும் , பாம்பு பலூன்களையும் வெடித்து சிதறவிட்டு அழகு பார்ப்போம்.

ஐயப்பா மற்றும் MKM தியேட்டரில் ஒரு படத்தை பார்த்து திரும்புவோம். இன்னும் பலவகையான நெஞ்சத்தில் இருந்து நீங்காத சம்பவங்கள் உள்ளன.

இப்படியெல்லாம் ஊர்மக்களுடன்  கொண்டாடிவிட்டு அயல்நாடுகளில் கொண்டாடும் பொழுது,.

உடல் மட்டும் தான் இங்கே இருக்கிறது. மனம் ஏனோ ஊரையே சுற்றி சுற்றி வருகிறது.

ஆயிரம் தொழுகைகள் வெளிநாட்டில் தொழுதாலும் சொந்த ஊரில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு அம்மாவின் கைகளினால் ” ஆழாத்தி பெற்றுக்கொண்டும், துவா பெற்றுக்கொண்டும் வீட்டுக்குள் நுழைவது எவ்வளவு பெரிய பேரானந்தம்.

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR