பெய்தும் கெடுக்கும்.. பெய்யாமலும் கெடுக்கும்.
சென்னையில் பெய்து கெடுத்துக் கொண்டிருக்கிறது ….
இது அதிரடி மழை என்பதா ?…
ஆணவ மழை என்பதா ?
எத்தனை மழை பெய்தால் என்ன ? இல்லாதவர்களுக்குதானே பிரச்சனை !!!
இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ….
இல்லாமல் போனது தினசரி பிழைப்பு ..
வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் …
வெளியே வர மறுக்குது இங்கே ….
அரசு இயந்திரங்கள் நீரை
வெளியேற்றும் போராட்டத்தில் ….
இயக்கங்கள் பல தானாக முன்வந்து
வெள்ளத்தோடு யுத்த களத்தில் …
வெள்ளையனை வெளியேற்றியது கூட இலகுவாக இருந்தது ….இந்த
வெள்ள நீரை வெளியேற்றுவதில்
எத்தனை எத்தனை கஷ்டங்கள்….
தாழ்ந்த இடத்தில் வசிப்போருக்கு தண்ணீரோடு பிரச்சினை ..
உயர்ந்த இடத்தில் வசிப்போருக்கு உணவு வரவேண்டுமே என்பது பிரச்சினை .
கழுத்தளவு தண்ணீரில் படகுகள்
செல்கின்றன மக்களை காப்பாற்ற ….
கணுக்கால் அளவு தண்ணீரிலும் படகு நிற்கின்றது அரசியல் தலைகளை புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்த …
செம்பரம்பாக்கம் திறக்கப்பட்ட போதிலும் ..
ஊருக்குள் நீர் வரவில்லை என்பதே உண்மை.
ஏரி நீர் யாருக்கும் சேதாரம் இன்றி …
ஆட்சியாளர்களின் கடும் கண்காணிப்பால்
அடையாறு வழியாக கடலுக்குள் கலக்கிறது
பம்பரமாய் சுற்றி வரும் முதல்வர் …
வெள்ளத்திற்கு உள்ளே வீதி உலா வரும் அமைச்சர்கள் ….
எம் மக்களை காப்போம் என்று சபதம் எடுத்து
மக்களோடு மக்களாய் நிற்கும் எம்எல்ஏக்கள்.
தற்போதைய ஆட்சியாளர்களின் கடும் உழைப்பால் நிம்மதி கொண்டோம்…..
இத்தனை இயற்கைச் சீற்றத்திலும்…
உயிரிழப்பு ஏதும் இல்லை சென்னையில் என்பது மிகப் பெரிய ஆறுதல் .
வரும் காலங்களில் எத்தனை
இயற்கை சீற்றம் வந்தாலும்
மக்களை பாதுகாக்கும் வகையில்
தமிழகத்தை நீங்கள் கட்டமைக்க வேண்டும் என தற்போதைய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் …..
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் …..வசிப்பிடம் சென்னை .
11.11 .21