Madukkur
பொது செய்தி - General

புதிய பள்ளிவாசல் கட்டிடப் பணி

ஏக இறைவனின் திருப்பெயரால் …  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் .  கண்ணியமிக்க மதுக்கூர் ஜமாத்தார்களே .. மதுக்கூர் மண்ணில் பிறந்து உலகெங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மதிப்பிற்குரிய மதுக்கூர் சகோதரர்களே ….உங்கள் அனைவர்களுக்கும் ஒரு சிறப்பான  நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம் ..  இன்ஷா அல்லாஹ் நாளை காலை (17.09.22) 7.30 மணி அளவில் நம்முடைய நீண்டநாள் எதிர்பார்ப்பும், கனவும் ஆகிய புதிய பள்ளிவாசல் கட்டிட பணியின் முதல் தளம் சிலாப் போடும் வேலை நடைபெற இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் …  நமது ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த அல்லாஹ்வினுடைய பள்ளியின் பணி சீரோடும்,  சிறப்போடும் கூடிய விரைவில் நிறைவு பெற திருமறை தந்த இறைவனிடம் இரு கரம் ஏந்தி துவா செய்ய வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றோம் .  நிர்வாகத்தினர் . ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி , மதுக்கூர்.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR