Magazine பொது செய்தி - General

புதிய கப்ருஸ்தான் நடைமுறைப்படுத்தும் பணி

நமதூர் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த புதிய கப்ருஸ்தான் நடைமுறைப்படுத்தும் பணி இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், இரண்டு சங்கங்களின் நிர்வாகிகள், நமதூர் சமுதாய அமைப்பு சகோதரர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் என மதுக்கூர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய கப்ருஸ்தான் நுழைவு வாயிலில் பெயர் பலகை வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து புதிய கப்ருஸ்தானின் உட்பகுதிகள் சுத்தம் செய்தல், ஜனாஸா தொழுகைக்கான தண்ணீர் மற்றும் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்புற பணிகள் நிறைவடைந்து பின் தமிழக அரசின் முறையான நடைமுறைகளை பின்பற்றி ஜனாஸா அடக்கம் செய்தல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவியுங்கள்