எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக மமக மதுக்கூர் பேரூர் கழக பொதுக்குழு– புதிய நிர்வாகிகள் தேர்வு
மே-5 அன்னை கஜிஜா அம்மாள் மதரஸாவில் சகோ ராசிக் அகமது தலைமையில் நடைபெற்றது, மாநில செயற்குழு உறுப்பினர் பாரூக் மகாராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை சாகுல் ஹமீது, அதிரை தமீம் அன்சாரி, தம்மாம் மண்டல் முன்னால் நிர்வாகி அஜ்மல் கான், கத்தார் மண்டலம் முஜிபுர் ரஹ்மான், முன்னால் துபை மண்டல தலைவர் SM ஹாஜா மைதீன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோ. அப்துல் ரஹ்மான் கிராத் ஓதினார், மதுக்கூர் துபை மண்டல பொறுப்பாளர் சகோ.KTMJ நிசார் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.
சகோ முகமது சேக் ராவுத்தர், சகோ ஃபவாஸ் கான், சகோ ஃபாரூக் மகாராஜ், சகோ SM ஹாஜா மைதீன் ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினர்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சகோ தஞ்சை பாதுசா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
இஸ்லாமிய அழைப்பாளர் சகோ அலி அக்பர் உமரி அவர்கள் “நல்லொழுக்க பயற்சி வகுப்பு” எடுத்து சிறப்புறையாற்றினார்.
அதனை தொடர்ந்து நிர்வாக தேர்வு நடைபெற்றது, மதுக்கூர் தமுமுக மமகவின் தலைவராக MSOA தாஜுதீன் அவர்களும், தமுமுகவின் செயலாளராக கா.பா. ஜெகபர் அலி அவர்களும், மமகவின் செயலாளராக Er. A. முகமது இலியாஸ் அவர்களும், தமுமுக மமகவின் பொருளாராக M.முகம்மது சேக் ராவுத்தர் அவர்களும்
அனைவரின் ஒத்துழைப்போடு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் தமுமுக மமகவில் ஏராளமானோர் தங்களை உறுப்பினர்களாக இனைத்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது, MMA நாசர், Er.இம்தியாஸ் அஹமது, கேப்டன் நத்தர்ஷா, சேக் ஜலால், சாகுல் ஹமீது, கா.பா. அஜ்மல், நிப்ராஸ், அமீர்,முகமது அனஸ், வாசிம், ராசிம், ஃபாரிக், சியாஸ், தவ்சிப், மாதிக், ஜாஃபர், அஸ்பாக், முஸ்ஃப், ஆசிஃப், முகம்து ஹயாத் என பல்வேறு நபர்கள் இனைத்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க அனைவரும் துவா செய்வீர்…
தமுமுக மமக
ஊடக அணி
மதுக்கூர் பேரூர் கழகம்
தஞ்சை தெற்கு மாவட்டம்