Madukkur
Madukkur Business

MASTER OF MADUKKUR BUSINESS

MASTER OF MADUKKUR  BUSINESS

” மதுக்கூர் நகரம்” வணிக வர்த்தகங்களிலும், வியாபாரத்திலும்,30 வருடங்களுக்கு முன்பு தனித்த சிறப்புடனும், தன்மையுடனும் பிரகாசித்த  காலகட்டங்களில் ” பேருந்து நிலையம் முதல், ஐயப்பா தியேட்டர் வரையிலும், சாந்தி மெடிக்கல் முதல் அண்ணாமெடிக்கல் வரை எனக்கு தெரிந்த, ஞாபகமுள்ள  தலைசிறந்த  வியாபாரிகளையும், அந்த நிறுவனங்களையும், அதன் உரிமையாளர்களின்  பெரியோர்களின் சில பெயர்களையும் நினைவு கூறுகிறேன்.

ஆற்றுப்பாலம், மெயின்ரோடு, முக்கூட்டுச்சாலை, சிவக்கொல்லை, பஜனைமடத்தெரு, இவை அனைத்தும் வர்த்தகம் நிறைந்த பகுதிகள்.

மளிகைகடைகள், தலைசிறந்த மருத்துவர்கள் மருத்துவமனைகள், கார் வேன் உரிமையாளர்கள்,டிராவல்ஸ்கள், செய்திதாள் முகவர்கள்,  மெடிக்கல்ஸ்,ஹோட்டல், பூக்கடை ,சலூன்கடை, பழக்கடை, ரைஸ்மில், ஜெனரல் ஸ்டோர்,
டீக்கடை, லாட்டரி வியாபாரிகள் , பிரிண்டிங் பிரஸ், ஹார்டுவேர்ஸ், ஜீவல்லரி , தட்டுவண்டி தொழிலாளிகள், ரிக்ஸா தொழிலாளிகள், சுண்டல் வியாபாரிகள் , அனைத்து விதமான மெக்கானிக்,டுட்டோரியல் காலேஜ்,ஸ்டுடியோக்கள், வாடகை சைக்கிள் கம்பெனி, என இன்னும் பலவகையான தொழில்கள்  வியாபாரங்கள், பல சரக்கு வியாபாரங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். அவரவர் தொழிலுக்கு செய்த முதலுக்கு தகுந்த  வியாபாரங்கள் செழுமை பெற்றன. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் நகரமாக அன்று முதல் இன்றுவரை “மதுக்கூர்” திகழ்கிறது.

இவையல்லாமல் சந்தையும் சந்தையை சார்ந்த சார்பு வர்த்தக நிறுவனங்களும், சிறு, குறு வியாபாரிகள் என அதனுடைய வியாபாரம் தனி சிறப்பு பெற்றது.

இந்த அனைத்து வியாபாரமும் சிறந்து விளங்கிற்று என்றால் அதற்கு காரணம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களின் ஆதரவு தான் நமதூர் வியாபாரிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், இதுதான்  மிகபெரிய அடித்தளம். இது மிகையாகாது.

விடுபட்டவைகளையும் உங்களுக்கு ஞாபகமுள்ளவர்களையும் கூறுங்கள். அடுத்தடுத்த பதிவில் இணைத்து கொள்வோம்.

பேருந்து நிலையத்திலிருந்து பழைய மதுக்கூரை” நோக்கி இடதுபுறமாக, முல்லை வீடியோஸ் திரைப்பட V.C.R கேசட் இங்கு தான் வாடகைக்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 1- ரூபாய் கேசட் வாடகை. டீ.வியும் வாடகைக்கு கிடைக்கும். பக்கத்தில் ப்ரியா ஸ்டுடியோ,  பண்டிகை காலங்களில் போட்டோக்கள் எடுப்பதற்கு வரிசையில் காத்திருந்து எடுப்போம்.

வீட்டு வாசலில் சைக்கிள்களை பழுது நீக்கும் மெக்கானிக்.

பிரசித்து பெற்ற டைலர் கடை, கார்த்திகா ஐஸ் ஹவுஸ் சர்பத்கடை மிக பிரபலம். உத்திராபதி டீ கடை மிகமிக பிரபலமானது.

இந்திரா வாடகை சைக்கிள் கம்பெனி, வெளியூர்களிலிருந்து வரும் மக்களுக்கு தங்களது வேலைகளுக்காக செல்வதில் இங்கு தான் வாடகை சைக்கிள்  எடுப்பார்கள்.

ராஜா மெடிக்கல் இரவு 10.30 மணி வரை மருந்து மாத்திரைகள் கிடைக்கும். தேவா பேன்ஸி ஸ்டோர், வார இதழ்கள் கிடைக்குமிடம்.

ஜோதி கண்ணாடி சென்டர், R.R டிராவல்ஸ் வெளிநாடு செல்வதற்கு டிக்கெட் போடுமிடம். ரீவைண்டிங் ஒர்க்ஸ் ,சதீஷ் பேட்டரி , தி.மு.க ஒன்றிய அலுவலகம். பஷீர் டைலர்.

வாடகை கார், வேன்கள் நிறுத்தியிருக்கும் பகுதியிலிருந்து, ஒரு டீக்கடை,  கோழி இறைச்சி நிலையம், சேகர் சலூன்கடை, கார்த்திகா டிராவல்ஸ்(பெரியகோட்டை) சௌந்தராஜன் அவர்கள்  முதன் முதலாக நமதூரிலிருந்து  சென்னைக்கு 96-ல்  R.T.T என்ற தனியார் பேருந்து துவக்கி வைத்தார்.

மதி மியூசிக் சென்டர் ஆடியோ கேசட் விற்பனை நிலையம்.

கிராமங்களுக்கு புறப்பட காத்திருக்கும் பேருந்துகள் 8-ம் நம்பர், சில பஸ்களின் வருகைக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடையுடன்  சில கடைகள் இணைந்து இருக்கும்.

பூக்கடை, மிக்ஸர்கடை, சிறியபெட்டிகடை, P.T.E.A காம்ப்ளக்ஸ் நியூஸ்டோர் ஜெனரல் ஸ்டோர்,பிளாஸ்டிக் குடங்கள் வீடுகளுக்கு தேவையான இதர சாதனங்கள் கடையை சுற்றி தொங்கவிடபட்டிருக்கும். உள்பக்கத்தில்  ஜோசியர்,பூக்கடை மற்றும் குடோன்கள், சாமி காபிபார் தலைசிறந்த வியாபாரி, வெங்கடேஸ்வரா ஹோட்டல், சாய்பரிசோதனை நிலையம்,
சமுத்திரவேல் அப்பா மிக்ஸர்கடை, தொழிலில் மிக கவனமாக உழைத்து மக்களின் அன்பை பெற்றவர்.

ஹமீதுஅப்பா செருப்புகடை, ஆடு மாடுகளை கைது செய்து அடைக்கும் பேரூராட்சியின் பவுண்டு, தள்ளுவண்டி பழக்கடை, பூக்கடை, டீக்கடை பழநி அப்பாவின் குடிசைவீடு, உள்பக்கத்தில் சின்ன பள்ளிவாசல், SNS முஹைதீன் ஹோட்டல், நமதூரில் அப்போதைய மிகப்பெரிய ஹோட்டல்.

உள்பக்கத்தில் டாக்டர் வாஞ்சிலிங்கம்,குழந்தை நல மருத்துவர். பிரசன்னா காபிபார்,G.D.R தர்மராஜன் அப்பாகடை வார இதழ்களின் விற்பனை நிலையம்.மில்கா பிரெட் ஏஜெண்டும்.

ஜமாலிய்யா பேன்ஸி ஸ்டோர்,வாட்ச் ஸ்டோர், என பள்ளி மாணவர்களிடம் வரவேற்பு பெற்றது.

உள்பக்கத்தில் மதி டிராவல்ஸ்,மன்னார்குடி செல்லும் பயணிகள் படர்ந்து விரிந்த புளியமரத்தின் நிழலில் பேருந்திற்காக  காத்திருப்பார்கள். இதுதான் அன்றைய பஸ்ஸ்டாப்.

சோழன் மெடிக்கல்ஸ், பைரவி ஆயில் கடை, வாசலில் மீண்டும் ஒரு அழகிய புளிய மரம், சத்யா டிரைவிங் ஸ்கூல் 96- பிறகு வந்தது  என்று நினைக்கிறேன். ஊதாகலர் தகர கூடாரத்துடன் காலணி தைக்கும் தொழிலாளி, நமது பள்ளிக்கூடம், அடுத்தும் ஊதா கலர் தகரகூடாரத்துடன்   காலணி தைக்கும் தொழிலாளி, மனோரா சைக்கிள் கம்பெனி,C.K.M.R கிப்ட் வேல்டு, S.S.Bமில்,பூக்கடை ரவி, ரஹ்மானியா சர்பத், மக்களிடம் பிரசித்தி பெற்றது.

ஜமால் மளிகை, மணிஸ் துணியகம், சுப்பையன் அப்பா ஹோட்டல்,குஸ்கா இன்றுவரை மக்கள் மனதில் அதிலும் பொதுவாக பள்ளியில் படித்த மாணவர்களின் நெஞ்சில் குடிகொண்டு வாழ்கிறது.

ஆற்றின் இருபுறமும், பாலங்களில் அமர்ந்த வண்ணம் வியாபாரம் செய்யும் லாட்டரி வியாபாரிகள்.

BWD அரசு அலுவலகம், தள்ளுவண்டி சுண்டல் வியாபாரிகள் 3- பேர், பிளாஸ்டிக் பொருட்களை தரையில் பரத்தி  விற்கும் தரை வியாபாரி, M.K.M.தியேட்டரில் ஓடக்கூடிய “பூந்தோட்ட காவல்காரன்” படத்தின் விளம்பர தட்டி, காமதேனு டீஸ்டால், 2- பெட்டிக்கடை, சாந்தி காபிபார், அதனை தொடர்ந்து ஒரு பெட்டிக்கடை , பக்கத்தில் சில நேரங்களில் மண்ணெண்ணெய், பெட்ரோல் அவசரத்திற்கு விற்கும் வியாபாரி, இதற்கு பிறகு பழைய மதுக்கூர் எல்லை .

எதிர்புறம், கமோண்டர் செல்லையன் மருத்துவர், சலூன்கடை, மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில்  சிம்மாசனமிட்டு  வாழும், சிறிய காசுகளில் பெரும்மகிழ்ச்சியை தந்த,கலைகளின் பொற்க்களஞ்சியம் பெரும்பாலான மக்களின் “சுவாசகாற்றை” உட்கொண்ட ஐயப்பா தியேட்டர்,பெரிய அழகிய புளியமரத்துடன் தகரடின் குலுக்கல் வியாபாரி. அதனை தொடர்ந்து பாட்டுபுக் கேசட் & பேன்ஸிஸ்டோர் கடை, பைக் ஒர்க்ஷாப், வெல்டிங்பட்டறை,சலூன்கடை, ராசு செட்டியார் வீடுடன் கூடிய உணவகம், 407- வேன் ஸ்டாண்ட், மாடியில் “லெட்சுமி சரஸ்வதி இன்ஸ்டிடியூட்” டைப்ரைட்டிங், நிறைய மாணாக்கர்கள் டைப்பிங் கற்ற இடம். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பல மாணாக்கர்களை ஆசிரியர்கள்  ஜேசுதாஸ், சுப்ரமணியன்,டேவிட், கருணாநிதி ஆகியோர் தன்னம்பிக்கை வார்த்தைகளை ஊட்டி, தோல்வியின் கவலைகளிலிருந்து மீட்டு கல்வி பயிற்றுவித்து அடுத்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பார்கள். அதில் நானும் ஒருவன்.

கீழே சாக்குமூட்டைகள்,தானியங்கள்  அடுக்கி இருக்கும்  குடோன்.

லாரி சர்வீஸ் ஆபிஸ், பெரியார் மிதிவண்டி நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், பக்கத்தில் டாக்டர் இராமலிங்கம் மருத்துவமனை.

பால்டாயில் (பஞ்சாயத்துகளை) குடித்தவர்களை காப்பாற்றும் கைத்தேர்ந்த டாக்டர். அன்றைய மருத்துவ துறை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் நிறைய மக்களின் உயிரை  காப்பாற்றி இருக்கிறார் . மக்களிடம் பிரசித்தி பெற்றவர் டாக்டர் இராமலிங்கம், இரும்புகூண்டுபெட்டிகடை, லாட்டரிகடை, ஆற்றை கடந்து, கரீம் லாட்டரி ஸ்டால், பின்பக்கத்தில் கிளப், திமுக ஆபிஸ், பெட்டிகடை, இடதுபுறம் திரும்பினால்  ஒரு ஹோட்டல் , எதிர்புறம் தென்றல் டீஸ்டால், புவனேஸ்வரி ரைஸ்மில், SSB ஆயில் மில், K.R.K கடை, சமது மளிகைகடை, லாட்டரி ஸ்டால், அஜீஸ் சைக்கிள் கம்பெனி, உசேன் டீஸ்டால், தட்ஷிணாமூர்த்தி அப்பா சலூன்கடை,  டைலர்கடை, மீண்டும் ஒரு சலூன்கடை, இரும்புகடை ஹார்டுவேர்ஸ், ஞானம் டைலர், ஆத்மநாதவிலாஸ் பாத்திரக்கடை, SSB மில், லக்ஷ்மி ஸ்டேஷனரி, பரணி ஸ்டேஷனரி, மண்ணெண்ணெய் அங்காடி, சிவமுருகவிலாஸ்(ஆனந்தன்) பாத்திரக்கடை, புலவர் ஐயா திருவள்ளுவர் 333- சென்னை பேருந்து புக்கிங் ஆபிஸ் அ.தி.மு.க ஆபிஸ் இருந்தது போல் ஒரு ஞாபகம்,ஒரு ஓட்டு வீடு, சிறிய புளியமரத்துடன், S.P.T ரைஸ்மில், மீண்டும் ஒரு வீடு,ரேடியோ சர்வீஸ் கடை, சந்திரபோஸ்  பாத்திரக்கடை, மீண்டும் ஒரு பாத்திரக்கடை ,வயதான அப்பா ஒருவரும் அம்மா ஒருவரும் இருப்பார்கள்.

டாக்டர் அறிவழகன், தாமரை மெடிக்கல், காய்கறிகடை, டீக்கடை, பைக் ஒர்க்ஷாப்,உள் பக்க சந்தில் .

ஒரு சிறிய கோயில், மற்றும் பழைய பாத்திரம் வர்ணம் பூசும் வியாபாரி, ராஜ்பவன் ஹோட்டல், வல்நிலையம்,பரபரப்பு இன்றி காணப்படும். சீனிவாசா உரக்கடை, விஜயாபிரஸ், உதயம் பேக்கரி, ம.தி.மு.க. அலுவலகம் .

ராஜ்கலா காம்ப்ளக்ஸ் நவீன் பர்னிச்சர், இது 98- ல் வந்திருக்கலாம் . அதற்கு முன்பு  அந்த இடத்தில் என்ன   இருந்தது  என்று தெரியவில்லை.எனக்கு விபரம் தெரிந்து பெரிய உயரமான கீற்றுச்சுவர் எழுப்பபட்டு  இருந்தது.

தள்ளுவண்டியுடன் பழக்கடை, வளநாடு மளிகை, பிரசித்தி பெற்றது.

வாசலில் ஐயப்பா தியேட்டரில் ஓடக்கூடிய “ராஜா சின்ன ரோஜா”  பட  விளம்பர தட்டி, மீண்டும் பழக்கடை, சுப்ரமணியன்(பழநி) டீக்கடை ஆடியோ கேசட்கடை, லாட்டரிகடை, ராசிரெடிமேட் துணியகம்,

அழகிய பூக்கடை,சோழன் மளிகைகடை .பாம்பே ஸ்வீட்ஸ்டால் மிக்ஸர்கடையுடன் காட்சியளிக்கும்.

H.R.MAN காம்ப்ளக்ஸ் மாடியில் J.B.திணமனி பத்திரிக்கை ஆபிஸ், லோட்டஸ் மியூசிக்கல்ஸ், ஆடியோ பாடல்கள் பதிவு செய்யுமிடம்.

சாந்தி மெடிக்கல்,பைக் ஸ்பேர்பார்ட்ஸ் கடை, ஜமால் சைக்கிள் கம்பெனி, மின்சார ஊழியர்கள் சங்கமிக்குமிடம்.

அதனை தொடர்ந்து செல்வம் டாக்டர்.பெயர் மட்டும் அல்ல மருத்துவத்திலும், குணத்திலும் செல்வம் நிறைந்தவர். அப்போதைய 5- ரூபாய் டாக்டர்.

மஹாராஜா டெக்கரேஷன் பாத்திரம் வாடகை கடை, ராணி ப்ளவர்மில், டீ காபிதூள் கடை.

பஜனைமடதெருவில் வளையும் பொழுது.

சாமியப்பா&  பூபாலன் எதிரெதிர் திசையில் அமையபெற்ற இரு பெட்டிகடைகள்.தொங்கி கொண்டிருக்கும்  பச்சநாடா, ரஸ்தாழி, பூவம்பழம், கற்பூரவள்ளி, மொந்தம் பழம்  வாழைபழங்களின் அழகுகள் இன்றும் ரசிக்க தக்கவை.

சக்தி ஜெராக்ஸ்,வெளிநாட்டு பொருட்களை விற்கும் வியாபாரி, பக்கத்தில் காய்கறிகடை பாலு.

எதிர்புறம் பத்தர்கடை, ஹார்டன் ஹோட்டல், சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ்& எலக்ட்ரிக்கடை , எதிர்புறமாக தேங்காய் விற்பனை கடை, எதிர்புறம் நைனா முஹம்மது உரமில்,பல லோடுமேன்கள் உரமூட்டைகளை லாரியில் ஏற்றுவதும் இறக்குவதுமாக பரபரப்பாக இருப்பார்கள்.

லோடுமேன் நாகூர்பிச்சை அப்பா ஒரு காதில் பீடியை சொருகி கொண்டு மூட்டை தூக்கும் விதம் அழகாக இருக்கும்.

அதனை தொடர்ந்து சிறிய கீற்று கொட்டகையுடன் எளிய அழகிய  சலூன் கடை நடத்திய மந்திரி, கலைமகள் டைப்ரைட்டிங் தெருவின் முக்கத்தில், வெண்ணிலா டிரைகிளினர்ஸ், எதிர்புறம் நியூஸ்டைல் டைலர், நூர்ஜஹான் ஆப்டிக்கல்ஸ், ராஜா பிரிண்டர்ஸ், வெங்கடேஸ்வரா டுடோரியல் காலேஜ், செண்பகம் லாரி சர்வீஸ் எதிர்புறமாக, E.S.M கேபிள், கிரெஸண்ட் டெக்கரேஷன் சென்டர் அதனுடன்  அத்தகும்மாஸ் நண்பர்கள் அலுவலகமும் கூட, வெளிநாட்டு பொருட்கள் விற்கும் வியாபாரி சுகுமார்.

மாடியில் சன் மியூசிக்கல்ஸ். அதனை கடந்து சுண்ணாம்பு விற்கும் பாட்டி, எதிர்புறமாக  L.V.B BANK கட்டிடம்  வருவதற்கு முன்னால் ஒரு அழகிய கீற்றுவீடு இருந்தது.

பக்கத்தில் விஜயலெட்சுமி பவர்பிரஸ், நூலகம் பெரும்பாலான மதுக்கூர் மக்கள் பயன்பெற்ற இடம்.அம்புலி மாமா கதைபுக் முதல் தினசரி செய்தித்தாள்கள், ஆங்கில பேப்பரும் படித்த இடம். காலை 8 to 1 மதியம் 3 to 7- வரை இயங்கிய நூலகம். பக்கத்தில் சிதம்பர பத்தர்கடை .

எதிர்புறம் விஜய்ஸ்டோர் குடோன், பக்கத்தில் ஒரு சலவைநிலையம், தாமரை வாட்ச் கம்பெனி, எதிர்புறம் டைலர்கடை, சலூன்கடை இருந்தது.

மத்திய கூட்டுறவு வங்கி , மாடியில் M.C.N கேபிள் 99- பிறகு வந்து இருக்கலாம்.

விஜய்ஸ்டோர், பள்ளி மாணவர்கள் கோனார் தமிழ்உரைக்கு சிறப்பு பெற்றது.

எதிர்புறமாக அழகிய இராமர்கோயில், எதிர்புறமாக ஒரு டீக்கடை, அதனருகில் பேரூராட்சியும், காலை- 8மணி, மதியம்-1 மணி இரவு மணி -9 மணி   என நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக சங்கு ஊதிகொண்டே இருக்கும் பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. M.G.R மறைந்த அன்று சங்கு தொடர்ந்து கறைவதும், அமத்துவதுமாக மக்களுக்கு இறப்பு செய்தியை தெரிவித்தார்கள்.

சுவாமிநாதா அரிசி ஆலை, பழனியப்பா சைக்கிள் மார்ட், எதிர்புறமாக மருது சைக்கிள் கம்பெனி, K.K.ஸ்டோர், நாராயணசாமி ஹார்டுவேர்ஸ், பன்னீர் சலவை நிலையம் , பெரிஸ்  பிஸ்கட் சேகர் பெட்டிக்கடை, எதிர்புறம் செல்வம் மெடிக்கல், டீக்கடை, பெட்டிக்கடை ஒரு சிறிய ப்ளவர் மில், தன்ராஜ் சைக்கிள் பழுது நீக்குபவர், P.T.S கோபி மளிகை , பத்தர்கடை,  எதிர்புறம் விநாயகா சைக்கிள் கம்பெனி,  தெரு முக்கத்தில் ”  இந்தியன் பேங்க்” அதனருகில் டாக்டர் ரேவதி மருத்துவமனை, தபால் நிலையம் , கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் வங்கியும், சிறிது எதிர்புறங்களில், மார்க்கெட் பகுதிக்குள் முதல் கடையாக சோமு அன்கோ சைக்கிள் கம்பெனி, எதிர்புறம் சுல்தான் ரெடிமேட்ஸ், சில டைலர்கடைகள் இருந்தது.

காதிவஸ்திராலயம் கதர் ஆடைகடை, எதிர்புறம் பூக்கடை, பெரமையன் அயனிங் நிலையம், எதிர்புறம் பவர்சோப் அலி ஜெனரல் ஸ்டோர், பாண்டுரங்கன் மளிகைகடை, நந்தா டிராவல்ஸ், பத்தர்கடையுடன் S.S.B சந்து வந்துவிடும்.

அதன் தொடர்ச்சியாக ஹை-கிளாஸ் டைலர்,எதிர்புறம் பாக்கர்  பேன்ஸிஸ்டோர், பக்கத்தில் மண்ணெண்ணய் அங்காடி யூசுப் ,யாக்கூப் நாட்டு மருந்து கடை, இரண்டு பக்கத்திலும் பத்தர்கடைகள், கவிதா ஜீவல்லரி, சுமங்கலி ஜீவல்லரி, ராயல் ஜீவல்லரி, S.R.ஜீவல்லரி, எதிர்புறம் இஷாக்& கோ ஹார்டுவேர்.

கொலுசு மற்றும் வளையல்களை பாலிஷ் செய்யும் பத்தர் , G.S. சோமுசெட்டியார் மளிகைகடை, மரக்கலர் பேனாவில் அவர் ரோக்கா எழுதும் அழகு ரசிக்க தக்கது.எதிர்புறமாக அண்ணா மெடிக்கல்,  என பல ரகமான வர்த்தக நிறுவனங்களும், வியாபாரிகளும் அழகிய முறையில் வர்த்தகம் செய்து வாழ்ந்தனர். இன்றும் தொன்றுதொட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

(வியாபாரிகளின் நினைவுகள் தொடரும்)

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR