Madukkur
பொருளாதாரம் - Finance

Internal Audit மற்றும் அதன் முக்கியத்துவம்

இன்று வணிக உலகம் நாளுக்கு நாள் பெரிதாகவும் அதிநவீனமாகவும்  வளர்கிறது. பல கட்டுப்பாடுகள் மற்றும் சவால்கள், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களை செயல்முறை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்துகின்றன.

இந்த செயல்முறை கொள்கைகள் வடிவமைத்து, அதை சரிபார்க்க ஒரு வழிமுறை இருக்க வேண்டும். இது தான் Internal Auditing.

பல பங்குதாரர்கள்ஆடிட்டிங் என்பது வருட இறுதியில் நடத்தப்படும் ஒரு செயல்முறையாகவும்நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள எண்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிப்பது என்று புரிந்து கொண்டுள்ளனர்.ஆனால் அப்படி இல்லை.

ஒருஆடிட் என்பது இரண்டு வகையானது: ஒன்று உள்நோக்கியதும் மற்றொன்று வெளியில் இருந்து ஆகும்.

( வெளியில் இருந்து ) External Auditors, அவர்களின் முக்கிய வேலை ஒரு நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் மீது கருத்து தெரிவிப்பது.

( உள்நோக்கிய ) Internal Auditors , நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள்.

நிருவனங்கலில் Internal Auditors துறையின் முக்கியத்துவத்திற்கு, நிறைய காரணிகள் பங்களித்துள்ளன.

உலகளாவிய அளவில், என்ரான் கார்ப்பரேஷன் வணிகத்தின் மோசடி Internal Auditing இன் முக்கியத்துவத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது.

60 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் என்ரான் நிறுவனங்கள், அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய திவால் அறிக்கைகளில் ஒன்றை அறிவித்தது ! இதன் விளைவாக அதிக விவாதமும் கணக்கியல் தரத்தை மேம்படுத்த சட்டங்களும் உருவாக்கப்பட்டன –  நிதி உலகில் நீண்டகால விளைவுகள் ஏற்பட்டன.

மோசடியின் அடிப்படை பின்வருமாறு, எரிசக்தி வழித்தோன்றல் ஒப்பந்தங்களின் வர்த்தகத்தில் என்ரான் ஈடுபட்டது:

1. அவர்கள் தங்களின் ஒப்பந்தங்களில் மார்க்டுமார்க்கெட்என்று குறிக்கும் நடைமுறையை தொடங்கினர். இது அவர்களின் நிதிநிலை அறிக்கையில் உண்மையற்ற லாபத்தை காண்பித்தது.

விளக்கம் :மார்க் டு மார்க்கெட் ‘ என்பது ஒரு சொத்தை அதன் தற்போதைய சந்தை நிலைக்கு மதிப்பிடும் முறையாகும். இன்று ஒரு நிறுவனம் சொத்தை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதை இது காட்டுகிறது. ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு காலப்போக்கில் குறைந்துள்ளதா அல்லது குறையகூடுமா என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நிறுவனம் தவறான எதிர்கால லாபத்தைக் காட்டலாம். இந்த ஒப்பந்தங்களின் நம்பகத்தன்மை மற்றும் அவற்றின் தொடர்புடைய செலவுகளை மதிப்பிடுவது கடினமானது.

நடந்தது: இதில் தவறான கணக்கீடு மூலம், என்ரான் பங்குதாரர்கள் நிதி அறிக்கையில் பெரும் இலாபத்தைப் பார்க்கத் தொடங்கினர், இது மிகவும் மகிழ்ச்சியளித்தது, ஆனால், அது அவர்களின் உண்மையான அனுபவிக்கக்கூடிய லாபம் இல்லை!

2. நஷ்டத்தில் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் சிறப்பு நோக்க நிறுவனங்களுக்கு ( special purpose enterprises – SPE ) மாற்றப்பட்டன.

விளக்கம் : ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPE) என்பது தாய் நிறுவனத்தில் இருந்து தனியாக, சொந்த இருப்புநிலைக் குறிப்புடன் தனி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. தாய் நிறுவனம் மற்றும் அதன் முதலீட்டாளர்கள் மீது எந்த ஒரு எதிர்மறையான நிதி பாதிப்பு இல்லாமல், நிலையற்ற ஆபத்தான நிதி திட்டங்களை மேற்கொள்ள இது பயன்படுத்தப்படலாம். எனவே, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை முழுமையாகப் பார்க்காத முதலீட்டாளர்களிடமிருந்து முக்கியமான தகவல்களை SPE முலம் மறைக்க முடியும்.

நடந்தது : அனைத்து நஷ்ட ஒப்பந்தங்களும் சிறப்பு நோக்க நிறுவனங்களுக்கு ( special purpose enterprises – SPE ) மூலம் வழிநடத்தப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு, நஷ்ட அறிக்கை சுத்தமாக காண்பிக்கப்பட்டன.

SPEகளின் மற்றும் ‘மார்க்-டு-மார்க்கெட்’ முறைகளின் தவறான பயன்பாடு மற்றும் பிற மோசமான கணக்கியல் நடைமுறைகள், என்ரானின் திடீர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. என்ரான் கடன் வழங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் செலுத்த வேண்டிய பெரும் தொகையை செலுத்த முடியாமல் நிதி ரீதியாக சரிந்தது.

இந்த பெரிய மோசடிகளுக்குப் பிறகுதான், நல்ல நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும் அதை மேற்பார்வையிட ஒரு அதிகாரத்தின் அவசியத்தையும் அமைப்புகள் உணர்ந்தன.

கணக்கியல் நடைமுறையை மேற்பார்வையிட நிறுவனங்களால் அமைக்கப்படும் துறையானது ” Internal Auditing ” எனப்படும்.

Find the original article at:
https://www.linkedin.com/pulse/internal-audit-its-importance-part-1-ca-mohamed-afzal-/

By:
CA. M Mohamed Afzal
Financial Auditor, Dubai,UAE

1 கருத்து

Abideen M Yoosuf December 2, 2021 at 9:48 pm

அருமை

ஆடிட்டர் Afzal

முக்கியமா புதியவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR