முன்னேற்றங்கள் - Developments

நினைவூட்டல் … பெரிய பள்ளிவாசல் கட்டிடப் பணி

நினைவூட்டல் ……

ஏக இறைவனின் திருப்பெயரால் ….

அமீரகம்(UAE) மற்றும் UK, USA, கத்தார்,  சவுதி ,சிங்கப்பூர் வாழ் கண்ணியமிகு மதுக்கூர் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் சார்பாக “அஸ்ஸலாமு அலைக்கும்” என்கிற சலாத்தையும், ஹஜ்ஜுப் பெருநாள்  நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறோம் .

மரியாதைக்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே ….

ஏக இறைவனின் மாபெரும் கருணையால் நமதூர்  இஸ்லாமியப் பெருமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும், நமது சமுதாய பெருமக்களின் மிகப்பெரிய கனவுமான பெரிய பள்ளிவாசல் கட்டிடப் பணி துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ் ..

இதற்கான நிதி உதவியை மதுக்கூர் நமது சமுதாய நன்மக்கள் ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் கட்டிட கமிட்டி நிர்வாகத்தினரிடம் நேரடியாக நல்ல முறையில் ,சிறப்பான வகையில் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் .

கட்டிடப் பணியும் தடங்கலின்றி நடைபெற்று வருகிறது ..

ஐக்கிய அரபு அமீரகம் ,மற்றும் அயல்நாடுகளில்  வசிக்கும் நமது ஊர் மக்கள் இந்த அல்லாஹ்வினுடைய இல்ல பணிக்காக நன்கொடை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நல் நிய்யத்தோடு இருந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உண்மையான செய்தியாகும் ..

ஆகவே அன்பிற்குரியவர்களே ….

இந்த அல்லாஹ்வுடைய பள்ளிக்காக தாங்கள்  வழங்க எண்ணி இருக்கின்ற தங்களின் மேலான ஹக்குகளை ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் கட்டிட கமிட்டியின் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் அல்லது ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் கட்டிட கமிட்டி நிர்வாகத்திடம் ஊரில் இருக்கும் தங்கள் குடும்பத்தார்கள் மூலம் நேரடியாக அளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம் .

அல்லாஹ்வின் பள்ளிக்காக நிதி கொடுப்பது சிறப்பு ..இறைவன் அருளால் கடந்த ரமலானில் இருந்து சிறப்பான முறையில் மக்கள் நிதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ். அதேபோல்  தாங்கள் கொடுக்க எண்ணும்  தொகையை தாமதமின்றி அனுப்பி தந்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று இந்தப் பள்ளியின் பணி முழுமை பெற நாம் ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டும் என்று  அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

ஜாமிஆ மஸ்ஜித்
புதிய பள்ளிவாசல் கட்டிட கமிட்டி.
மதுக்கூர் . 614903.
18.07.2021.

Note from madukur.com: Kindly Contact Jamiya Masjid Renovation Committee–Madukkur for Bank Details 

கருத்து தெரிவியுங்கள்