Madukkur
முன்னேற்றங்கள் - Developments

அடிப்படை வேலையில் இருந்து நிர்வாகியாக – ஒரு சுய வளர்ச்சி பயணம்

பைக் மெஸெஞ்சர்

இந்த வார்த்தையினை நமதூரில் அறியாதவர்களோ கேள்விப்படாதவர்களோ இருக்க முடியாது . எனக்கு தெரிந்து 1990களில் இந்த வேலையில் மக்கள் அதிகமதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கலாம்.

இந்த வேலையின் மூலம் வருவாய் ஈட்டி நம்மவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொண்டனர். மதுக்கூரில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் உடனே ஒரு ஹெல்மெட்டும் வாங்கி வைத்து விடுவார்கள் என கேலி சொல்லும் உண்டு.

இந்த வேலை ஆபத்து நிறைந்ததாகும். வெயில், மழை, பனி என எல்லா காலங்களிலும் இவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஆனாலும் குடும்ப சூழ்நிலையினை காரணமாக கருதி இந்த வேலையில் சேருவார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம். அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் படித்துவிட்டு வரவில்லை ஏதோ கிடைக்கிற வேலையில் தொற்றி கொண்டு பிறகு லைசென்ஸ் எடுத்துக்கொண்டு மெஸெஞ்சர் வேலைக்கு சேருவார்கள்.

அப்படியில்லை என்றால் குதிரை விசா அல்லது சொந்த விசாவில் (சொந்த விசாவிற்கு சுமார் ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் வரை செலவாகலாம். இந்த தொகையினை சம்பாதிக்கவே ஒரு வருட காலம் ஆகும் என்பது தனி) வந்து ராஸ் அல் கைமா அல்லது ஃபுஜைரா லைசென்ஸ் எடுத்து கொண்டு துபையில் வேலைக்கு சேர்வது என்பது கூடுமானவரையில் அனைவரது வழக்கமாக இருந்திருக்கிறது.

வருத்தத்துக்கு உரிய விஷயம்…

அதே வழக்கம் (லைசென்ஸ் – பைக் மெஸெஞ்சர் – இப்போது கூடுதலாக டிரைவர்) இன்னமும் தொடர்வது மிகவும் வருத்தத்துக்கு உரிய விஷயம். அன்றைக்கு இந்த வேலை செய்தவர்கள் அதிக பட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருப்பார்கள். ஆனால் நான் இன்று பார்க்கின்ற நிறைய மெஸெஞ்சர் டிகிரி முடித்தவர்கள், என்னுடன் அதிரை KMC யில் படித்த எனது சீனியர்கள், ஜூனியர்கள் இன்னும் இன்ஜினியரிங் முடித்து விட்டு டிரைவர் வேலை பார்க்கிறவர்களும் உண்டு. இவர்களை பார்க்கும் போது மனது நிறையவே வலிக்கிறது.

இவர்களுக்கெல்லாம் ஏன் அவர்கள் துறை சார்ந்த வேலை கிடைக்கவில்லை? எங்கே அவர்கள் தடம் மாறுகின்றனர்? என என் பார்வையில் உள்ளவற்றை சொல்கிறேன்.

SKILL DEVELOPMENT

வேலை தேடி வெளிநாடு வருவதற்கு ஆசைப்படும் நம்மவர்கள் அதற்கான முன்னேற்பாட்டோடு வருவதில்லை.
இதில் முதல் படி மொழி. ஊரில் இருந்து இங்கு வந்ததும் நாம் சந்திக்கும் முதல் பிரச்சினை மொழி பிரச்சினை.

ஹிந்தி, மலையாளம், அரபி போன்ற மொழிகள் நம்மூரில் கேட்பதற்கு பேசுவதற்கு வாய்ப்பில்லை, ஆனால் ஆங்கிலம்..? எத்தனை வருடமாக ஆங்கிலத்தை பள்ளியில் படிக்கிறோம், அதில் புலமை பெற வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் எதிரிலிருப்பவர் கேட்பதை புரிந்து கொண்டு பதிலளிக்க, நமக்கான தேவைகளை எடுத்து சொல்லி புரிய வைக்கின்ற அளவிலாவது ஆங்கில அறிவை வளர்த்து கொள்வது மிக அத்தியாவசியமானது.

கூடுதலாக ஒரு பாஷை தெரிஞ்சா உனக்குள்ள கூடுதலா ஒரு ஆளு இருக்குறதுக்கு சமம்னு என் பெரியதந்தை சொன்னது நினைவுக்கு வருகிறது.

CONTACTS- சை வளர்த்து கொள்வது.

சூழ்நிலை கருதி கிடைச்ச வேலைல சேர்ந்தாலும் அந்த வேலையோட சொணங்கிடாம தன் துறை சார்ந்த வேலை தேடுறதுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் தான் CONTACTS- சை வளர்த்து கொள்வது.

தற்போது Linkedin போன்ற Appகளை பயன்படுத்தி கொள்ளலாம். நாம யார் கிட்டயும் வேலை தொடர்பா கேட்டா நம்மள தப்பா நினைச்சுக்குவாங்களோ, இல்ல இவங்க நமக்கு எதும் Refer பண்ணுவாங்களா மாட்டங்களானு யோசிக்கவே கூடா து. நம்மளோட இலக்கை அடைகிற வரையில் சோர்வடையாம இருக்கணும். இந்த மாதிரியான சூழல்ல நீங்க ஒரு சில கேரக்டர்களை பார்க்கலாம். நீ ஏன்பா இந்த நேரத்துல UAE வந்த? இங்கயே நிலைமை சரியில்லை, என சொல்பவர்கள். இவர்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். இவர்களை
புறந்தள்ள வேண்டியது அவசியம்.

SELF IMPROVEMENT & NEED TO COME OUT FROM COMFORT ZONE

Interview-ல் சாதாரணமாக நம்மை பற்றிய Self introduction எப்படி கொடுப்பது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஒரு நேர்முக தேர்வின் ஆரம்பம் Self introduction. நீங்கள் கொடுக்கும் Self introductionஐ வைத்து உங்களது பேச்சு திறமையினை முடிவு செய்து விடுவார்கள். பதட்டமில்லாமல் சுலபமான வார்த்தைகளை கொண்டு ஒரு பார்மெட் அமைத்து சொல்ல வேண்டும்.

ஒரு முறை Attennd பண்ண Interviewல என்ன தவறு பண்ணியிருக்கோம், அதை எப்படி சரி பண்ணிக்கனும்னு ரொம்ப கவனமா நாம நமக்கான Corrective Actionஅ செய்தால் தான் அதே தவறு மீண்டும் நடக்காது.

Interviewer எதிர்பார்க்கிற எந்த விஷயம் நம்ம கிட்ட இல்லை, அதை எப்படி Develop பண்றதுங்குறதுல அதிக கவனம் செலுத்தணும்.

COMFORT ZONE னா என்ன?

எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை நாம் ஒரு சின்ன வட்டத்துக்குள்ள சுருக்கி கொள்ளாம இருக்கணும். வெளில எங்கேயும் வேலையே கிடைக்கல, அதனால கிடைச்ச வேலைய வச்சே சமாளிச்சு ஒட்டிக்க வேண்டியது தான் என்கிற மனநிலையை அறவே வர விடாம பாத்துக்கணும். நாம பாத்துகிட்டு இருக்குற இந்த வேலைல நாம நல்லாவே பழகியிருப்போம், அது நம்மளையே அறியாம நமக்கு புடிச்சும் போயிருக்கும், அந்த வேலையை விட்டு போக மனசே வராது, வேலையில சேரும்போது நீங்க உங்களையே தேற்றி கொண்ட அந்த வார்த்தை சூழ்நிலையை சமாளிக்க தானே நாம இந்த வேலைல சேர்ந்தோம் அப்டிங்குறதையே மறந்து போய்ட்டீங்கன்னா, நீங்க ஒரு COMFORT ZONEல மாட்டிகிட்டீங்கன்னு அர்த்தம். COMFORT ZONE அ விட்டு வெளில வந்தா தான் நாம ஒரு நல்ல இடத்தை அடைய முடியும். (சொந்த அனுபவமும் கூட)

எனக்கு தெரிந்து பைக் மெஸெஞ்சர் ஆக வேலைக்கு சேர்ந்து தனது உழைப்பால் அல்லாஹ் உதவியை கொண்டு Office Executive ஆக வும் மற்றும் இதர நல்ல வேலைகளில் மாறியவர்கள் (எனக்கு தெரிந்த வரையில்) பலர்.இவர்களெல்லாம் சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையில் அந்தந்த காலங்களில் சேர்ந்து கொண்டு தங்களை வளர்த்து கொண்டு கடுமையான உழைப்பால் நல்ல இடத்திற்கு வந்தவர்கள்.

உழைப்புக்கேற்ற பலன் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று முழுமையா செயல்படனும், அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.

பல இலட்சங்கள் செலவு செய்து பட்டப்படிப்பு படித்து விட்டு இங்கு பைக் மெஸெஞ்சர் ஆகவும் டிரைவராகவும் வேலை செய்யாமல் நாம் நமது துறை சார்ந்த பணி செய்வதற்கு முழு மூச்சாக செயல்படுவோம். வெற்றியடைவோம். இன்ஸா அல்லாஹ்.

ரஹ்மானியா ஹபீப் முகமது

1 கருத்து

Anwar September 12, 2021 at 7:21 am

நல்ல பதிவு தம்பி
பல லட்சம் செலவு செய்து படித்து விட்டு
தடம் மாறி வேலை செய்வது …
அதே போல எனது நண்பர் இஞ்சினியர் படித்து விட்டு
ஷிப்பிங் கம்பெனியில் பணிபுரிகிறார்.
படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை..

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR