Madukkur
'80s '90s madukkur

கட்டம்கட்டி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தமதுக்கூர் வியாபாரிகள் .

80ஸ் & 90ஸ்

  கட்டம்கட்டி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தமதுக்கூர் வியாபாரிகள் .

நமதூரில் இக்கால கட்டத்தில் மார்க்கெட் பகுதிக்குள் சைக்கிளில் சென்று திரும்புவதற்குள் ஏண்டா சைக்கிளில் வந்தோம்  என்று தோணும்.ஆனால் இன்றோ லாரிடிரைவர்கள்’ இதரவாகனங்கள் சர்வசாதாரணமாக மார்க்கெட் உள்ளே பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.

தீபாவளி ‘பொங்கல் ‘பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் மதுக்கூர்city வியாபார கடையாக இருக்காது. வியாபார கடலாக இருக்கும். இங்கு வியாபாரம் செய்த ஒவ்வொரு தனிமனிதரும் தனித்தனி திறமையுடன் வியாபாரயுக்தி கொண்டவர்கள் கஷ்டமர்களை எளிதில் பேச்சில் கவரக்கூடியவர்கள் படிக்காதமேதைகள் .

4 திசை கிராம மக்களும் மதுக்கூரை மையம் கொண்டு தான் வியாபாரமும் ‘கொள்முதலும் செய்வார்களாம் பரவாக்கோட்டைகுட்பட்ட கிராமங்கள் , பாப்பாநாடு 4 ரோடு எல்லைக்குட்பட்ட கிராமங்கள் , நாட்டுச்சாலை எல்லைக்குட்பட்ட கிராமங்கள், துவரங்குறிச்சி எல்லைக்குட்பட்ட கிராமங்கள், சிரமேல்குடி எல்லைகுட்பட்ட மொத்த கிராம மக்களும் ‘மாட்டுவண்டிகள் மதுக்கூரை ஆக்கிரமித்து பார்க்கிங் செய்வதற்கு இடவசதி இல்லாமல் மெயின்ரோடுகளிலும் நிறுத்திவிட்டு வருவார்களாம் வணிகம் செய்யும் அனைத்து கிராம மக்களின் தொழில் நகரமாக விளங்கியது மதுக்கூர் மான்செஸ்டர் .

யார் கண் பட்டதோ 92லயோ, 93லயோ மிகபெரிய தீவிபத்திற்கு ஆளாகி தொழில் பொருட்கள் தீக்கிரையாகி தொழில்கள் நசுக்கப்பட்ட நிலையிலிருந்து மீளுவோமா ‘மாட்டோமா என்ற கலங்கிய நிலையில் நமதூர் வியாபாரிகள் கண்ணீர் விட்டு அழுதகாட்சிகள் இன்னும் நிறைய பேரின் நெஞ்சைவிட்டும் மறைந்திருக்காது பெரிய பள்ளிவாசலிலிருந்து மார்க்கெட் உள்ளே நுழையும் பொழுது அண்ணா மெடிக்கலிருந்து சின்னதம்பி அண்ணணோ’ மாலிக்  அண்ணணோ அவர்கள் காது கேளாத ஒருவரிடம் சொல்லுங்க ஒங்களுக்கு என்ன பண்ணுதுனு சத்தமா கேப்பாங்க. ஆம் நமதூருக்கு மட்டும் அல்லாது ‘மொத்த கிராமத்திற்கும் அன்றைய உயர்ந்த நிவாரணம் தருவது  அண்ணாமெடிக்கல்தான் .

அப்டியே எதிர்முனையில் செட்டியார் மளிகைகடையில் முறத்திலுருந்து வெங்காயம் பொடைக்கும் தொழிலாளிகள். இடதுபுறம் வடைகடை கரீம் அத்தா ‘ரஹ்மான் அவர்கள் வியாபாரம் செய்வதும் ‘பஜ்ஜி சுடுவதும்’எண்ணெய் சட்டியில் வடைமாவை உள்ளே போடும்பொழுது ஒரு வித இரைச்சலுடன் கடை பரபரப்பாக இருக்கும்.

அதனை  ஒட்டியுள்ள போஸ்ட் பாக்ஸ் பெட்டியில் போஸ்ட் மாஸ்டர் ராமச்சந்திரன் அவர்கள் பெட்டியை திறந்து கடிதங்களை வெளியில் எடுத்து கொண்டிருப்பார்கள்.

எதிர்புறம் டீக்கடையில் ஒரு சிறிய கண்ணாடிகூண்டுக்குள் 8 மசால்வடை ‘8சம்ஷா இதற்கு அதிகமாக இல்லாத ‘டீக்கடை வியாபாரம் பாய்லரில் ஆவி வந்த வண்ணமே இருக்கும்.

பக்கத்தில் பூட்டுசாவிகடை எந்த நேரமும் டார்ச்லைட்டை தட்டிசரி செய்துகொண்டு சாவண்ணா அத்தா. பக்கத்தில் பத்தர் ரமேஷ் நகை ஊதும் பணியை செய்து கொண்டிருப்பார்.

எதிர்புறம் மரைக்காயர் இரும்பு வர்ணம் ஜலீல் மரைக்காயரோ ‘ அல்பரீது அண்ணனோ சீக்கிரம் ‘கோனாரே சீக்கிரம்  என்ற வார்த்தை கேட்டுக்கொண்டே இருக்கும். அப்டியே SSB உள்ளே போனால் சைக்கிள் நிறுத்துவதற்கு பார்க்கிங் கிடைக்காது லாரிகளிலும் வேன்களிலும் சரக்குகள் இறக்குவதும் ஏற்றுவதுமாக லோடுமேன்கள் பரபரப்பாக இருப்பார்கள். பக்கத்தில் சுவாமிநாதன் ஸ்டோர்  செட்டியார் ‘ஏண்டா என்ன போட்டு  இந்த பாடாபடுத்துறீங்க  என்ற முக தோரணையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு பொருட்களை வாசித்து சரிசெய்வார் தொழிலாளிகளிடம்.

ஊர்வசி 10’பொன்வண்டு 10 Goldfilter10 ‘scissorfilter 10 செய்யதுபீடி 2பண்டல் ‘கணேஷ் பீடி 2’தாஜ்மகால் 1என மெல்லியகுரலில் வாசிப்பது நன்றாக இருக்கும்.

எதிர்புறம் அல்அமீன் சைக்கிள் கடை தோளில் துண்டு  வைத்தபடியே சைக்கிள்களுக்கு காற்று அடிப்பதும் துடைப்பாதுமாக பிஸியாக இருப்பார்கள்.நம்மகுறிச்சியார் அவர்கள்  எதிர்புறம் விக்டோரியா பிரஸ்  MRB அவர்கள் கவிஞர் வாலி போல் எந்நேரமும்  கையில் பிரஸ்ஸை வைத்துகொண்டு வண்ணம்தீட்டிய படியே  இருப்பார் .உள்ளே மிஷின்கள் பத்திரிக்கைகளை அச்சடித்த வண்ணமே இருக்கும்.

அப்டியே PTMமளிகை கடை கல்லாவில் அவருக்கே உரிய கம்பீரத்தில் உட்கார்ந்திருப்பது மிகமிக அம்சமாக இருக்கும். இடது கையால் ரோக்காக்களை வாசிப்பார்.  மஞ்சள் 50’பூண்டு 100 ‘வெந்தயம் 150 என்று வாசிக்க பஞ்சு ம்’ம்’ ம் என்ற முணங்கலை மட்டுமே பதிலாக கொடுப்பார்.

501 சோப் ‘  ரின் சோப் ‘அண்ணா பார்சோப் ‘3 ROSES டீதூள்  போன்ற விளம்பர போஸ்டர்கள் கடையை அழகுடன் ஆக்கிரமித்து கொண்டிருக்கும். கூடவே சாமி கணக்கபிள்ளையாக . சில நேரங்களில் PTM அவர்களின் தந்தையும் கடைக்கு வருகை தருவார்கள். கருப்பு கலர் தொப்பி அவருக்கே உரியது போல் அம்சமாக இருக்கும்.

மார்கெட் ரோடுகளில் நிம்மதியாக மக்கள் நடக்க செல்ல முடியாது சைக்கிள் பில்களின் சத்தம் காதை கிளிக்கும் இரண்டு சைக்கிள்கள்’அடிக்கடி ஒன்றோடொன்று மோதிக்கொண்டு கீழே விழுந்து கொண்டே இருப்பார்கள். விழுந்தால் 10 பேர் தூக்கிவிட ஓடிவருவார்கள்.

ஒருபுறம் இரட்டை கேரியரில் ஜீனிமூட்டை’மல்லிமூட்டைகளை வைத்து கொண்டு’அரைபனியனுடன் 1 கையில் சைக்கிளையும் மறு கையில் மூட்டைகளை நெஞ்சோடு அணைத்தபடி ஓரம் ஓரம் என்ற வார்த்தைகள் மார்க்கெட் பகுதியை தெறிக்க விட்டு கொண்டிருப்பார்கள்  மளிகைகடைதொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை கிழமைகளில் மிகவும் சிரமப்படுவார்கள். பெரும்பாலான மக்கள் மளிகைகடை ஊழியர்களாக இருந்தனர் .வீட்டைவிட்டு வேலைக்கு வரும் பொழுதே பனியனுடன்தான் வருவார்கள். நமதூர் செவ்வாய்க்கிழமை சந்தை திருவிழாபோல் காட்சியளிக்குமாம் சந்தைபள்ளிவாசல் முழுவதும் மாட்டுவண்டிகள் ஆக்கிரமித்து இருக்கும்.

நிறைய சிறுசிறு வியாபார கடைகள் ‘லாட்டரி ‘நகைபாலிஷ் கடை’பெட்டிக்கடை’போட்டோபிரேம் கடை’தகரடின்கடைகள் டைலர்கடைகளிலும் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது.

அப்டியே அமானுல்லா அண்ணன்  ஜவுளிகடை’ KSNA ஜவுளிகடைகரீம்அத்தா அமாஸ்  கடைகளில்  வெளியில் தொங்கும் கையலிகளும்’அவ்வளவு கண்கவர்ச்சியாக இருக்கும்.  ‘மற்ற அனைத்து ஜவுளிகடைகளிலும் புடவையை டெக்கரேஷன் வடிவமைப்பில் தொங்க விடபட்டிருக்கும் பூ போட்ட புடவைகள் கஷ்டமரை கவரும் விதமாக காற்றில் அசைந்தாடிகொண்டு இருக்குவிடுவார் சக்திரெடிமேட்ஸ் குமார்.

அடுத்ததாக மூட்டைபூச்சி ஆலிம்ஷா அப்பா( நகைச்சுவைநாயகர் ) ‘நவதானியவியாபாரம் ஆய்மொவள என்ற வார்த்தைதான் அதிகமாக கேட்கமுடியும் ‘பதிலுக்கு ராவுத்தரே ராவுத்தரே என்ற சொல்லும் அதிகமாக கேட்கும்.புளியங்கொட்டய எடைக்கு போட்டுட்டு சீக்கிரம் காசு கொடுங்க ராவுத்தரே 8ம் நம்பர் பஸ் போய்றும்னு கேட்க.

நம்ம ராவுத்தரோ ‘அடுத்த பஸ்ஸுல போகலாம்னு கண்ணன் டீ கடையில செட்டுல டீ வாங்கி ஆளுக்கு பாதியாக குடிச்சிகிட்டு சொந்தசேதி’குடும்ப சேதி’கிராமசெய்தியை பரிமாறிக்கொள்வார்கள் நகைச்சுவை உணர்வுடன்.

இந்த சேட்டையை எதிர்கடை செட்டியார் அவர்கள் கச்சலைவரிஞ்சிகட்டிகொண்டு பல்லைகடித்து கொண்டும்’ முறைத்துகொண்டு முணுமுணுப்பார்.

எதிர்கடை செட்டியாரிடம் செல்லசண்டை செய்வதும் ‘அவர்களும் ‘இவரிடம் செல்லசண்டை இட்டுகொண்டு மார்க்கெட்டை அலப்பறை பண்ணிகொண்டு இருப்பார்கள்.

அடுத்து கணக்கபுள்ள ஜவுளிகடை செல்லதுரை அண்ணன்.தனக்கென்று ஒரு கஷ்டமரை வைத்து கொண்டு தனது வியாபாரத்தை கட்டி காப்பவர்.

சித்திக் மரைக்காயர் மில் மல்லி’மிளகாய்  அல்லர் அறைக்கிற சத்தம் கறகறகறனு extra ordinary. பக்கத்தில உதயம் மளிகை.

அப்டியே எதிர்புறம் சர்பத்   சேட் அண்ணன் வாயில சிகரெட்ட வச்சுகிட்டு லாரிடியூப்ல ஐஸ்கட்டிய போட்டு உருட்டுகட்டைல அடிக்குறப்ப சத்தம் மீன் கடை வரை கேட்கும்.

6 விதமான தரமான  டீ கடைகள் ‘மார்க்கெட்டுக்கு பிரபலம்  டீ 60 காசு. இதில் டீ கடை கண்ணன் மட்டும் விதிவிலக்கு 1 நாள் கடை திறந்து வியாபாரம் பார்த்தால் அடுத்த 11நாள்  லீவுதான்.

காய்கறி வியாபாரிகள்’அண்ணன்கள் “அலாவுதீன் ‘சக்கரை’அமானுல்லா  ‘முருகையன் ‘ ஷேக் அண்ணன் ‘ ஆனந்த் ‘சாகுல்’ரவி கடையில் கமலஹாசன் தேவர்மகன் படபோஸ்டர்கள் கடைமுழுக்க ஒட்டி வைத்திருப்பார்கள்.

எதிர்புறம் பச்சைபசேல்னு வெத்திலைகுவியலுக்கு நடுவே உசேன்அப்பா 50 காசுக்கு 8வெத்தலை .அப்பா மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு போவதற்கு  வெளிநாடுலிருந்து வந்து இருக்கும் ஜமால்அண்ணன் மாத்திவுடுவாங்க.

வெள்ளைசட்டை ‘வெள்ளைகையலியில்தான் இருப்பாங்க பார்ப்பதற்கு. சின்னபசங்க வெத்துல வாங்க போனா வாடா தம்பி போடா தம்பி என்னா பண்ற ஏது பண்றனு கலகலனு ஜாலியா 2 நிமிடம் பேசிட்டுதான் அனுப்புவாங்க. எங்கள் தெருவில் சிறுவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட மனிதர் ‘எந்த நேரமும் சிரித்த முகம் தான். அல்லாஹ் அழைத்து கொண்டான்.

அப்டியே கோழிக்கடை வகையறா ‘கறிக்கடை வகையறா பக்கம் போனால் அண்ணன்கள் முஹம்மது’ ‘சேட்டு ‘ லியாக்கத்அலி  மற்றும் பல வியாபாரிகள் ஏரியா  சவுண்டாதான் இருக்கும்.பதற்றம் நிறைந்த பகுதியாக .

அப்டியே மீன்கடை போனால்  பண்ணைஏலம் வுடுற ஸ்டைலு பறபறப்பா இருக்கும். மீசை முறுக்கிவிட்டுகிட்டு ‘மீன்கட சலசலப்பு இருக்கே அதான்  மார்க்கெட்டுக்கே துணையாக  இருக்கும். உம்மல்பொட்டியில் மீன் வாங்குவது சிறப்பம்சம். சந்தைபள்ளி மாணாக்கார்கள் பெரும்பாலும் சாப்பிங் செய்யும் இடம் சரிபுவாவா கடைதான். பாட்டுபுக் ‘பொங்கல் வாழ்த்து ‘ ‘பக்கத்தில் பூக்கடை சதாசிவம் அண்ணன் கடையில் தொங்கி கொண்டிருக்கும் கல்யாணமாலைகள் பார்த்துக் கொண்டு அந்த் மாலைகள்  நம்முடைய மனதிற்கு ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை கொடுத்து கொண்டிருக்கும் .

தாஜ் அண்ணன் மளிகைகடை சிறுசேமிப்பு சீட்டுக்கு பிரபலம். முத்தான 3 மணிக்கடைகள் ‘பழகடைவியாபாரிகள் விஸ்வம் ‘அப்துல்லா அண்ணன். அப்டியே புளியமரம் பக்கம் சபிஅண்ணன் உப்புகடை. 1ரூபாய்க்கு கல்லு உப்பு வாங்கினால்  மஞ்சள் பை பாதி நிமிந்துரும்.

பக்கத்தில MJN சைக்கிள் வாடகை கடை 1மணி நேரத்திற்கு 60காசு  5’ம்நம்பர் ‘7ம்நம்பர் சைக்கிளுக்கு reservation பண்ணி வைக்கணும். ஜமுன்அத்தாட்ட பெரும்பாலும் white&white தான்.

சட்டைல மேல்பட்டன் போடவே மாட்டாங்க. அங்கே சைக்கிள் மெக்கானிக்காக நவுசாத் அண்ணன் ‘ஆளு பாக்கவே பிறர் பயபடும் தோரணையில் இருப்பார்கள்.  அவங்க சட்டை போட்டா கையலி கட்ட தேவையில்லை. முழங்கால் வரையும் சட்டை தொங்கும் அந்த ஸ்டைல் அவர் ஒருவருக்கே சொந்தமானது.

மரத்திற்கு பின்னால் ‘மருவள்ளிகிழங்கு ‘பூவரச இலையில் 10காசு சுண்ணாம்பு ‘பொரிச்ச முறுக்கு விற்கும் தாய்குலங்கள்  இன்னும் நிறைய நிறைய பெருமக்கள். அடுக்கி கொண்டே போகலாம். நீள்கிறது.

எந்த நேரமும்  PTS கண்ணன் அவர்களின்  மளிகைகடையில் பிரித்தமல்லி மூட்டையில் பத்திகள் எரிந்து கொண்டே வாடைவந்த வண்ணம்.இருக்கும்  தோழன் என்ற  வார்த்தைகு சொந்தக்காரர். வெள்ளிஇரவு வாரம் வாரம் தர்காவிற்கு சென்று பாத்திஹா ஓதும் பக்தி கொண்டவர்.

3 ரூபாய்கு நாநாகடைகுஸ்கா’பிரபலம்  ‘இன்றைய ராயல் பர்னிச்சர் ‘நியூ மெடிக்கல் இருக்குமிடங்கள் தான் ஒரு காலத்தில் மரம் விற்கும் கடைகள் இருந்தன அதுவே காலபோக்கில் மரக்கடையாக மாறியது அதுதான் மதுக்கூருக்கு அன்றிலிருந்து  இன்று வரை பெரிய அடையாளம்.  மரக்கடை பஸ் நிறுத்தம்.

இரவுநேர இட்லிக்கு இந்திராஹோட்டல் என பலவிதமான மக்களின் தேவையை நிறைவேற்றியது மதுக்கூர் மார்க்கெட்.

உள்ளே புகுந்தால் இந்த பொருள் கிடைக்கவில்லை என யாரும் திரும்பிட முடியாது. இப்படி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த நமதூரின் வியாபாரசோலையான  சொர்க்கபூமியான மதுக்கூர்  மார்க்கெட் கடந்த பல வருடங்களில் வியாபாரம் சிறிது சிறிதாக  குறைந்து கொண்டே வருகிறது.மறுபுறம்  கொரோனா ஊரடங்கு காரணமாக  தன்னை துயில்கொள்கிறது.நமதூர் மார்க்கெட்.  ஆராவாரமில்லாமல் காட்சிஅளிப்பது நமதூருக்கு.ஒரு பேரிழப்பே தான்.

மீண்டும் மதுக்கூர் வியாபாரம் செழிக்கணும் என்பதே நிறைய மக்களின் ஏக்கமாக உள்ளது.

By Janab S Jabarullah

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR