Madukkur
'80s '90s madukkur

90ஸ்களின் கால்பந்தாட்ட ஆடுகளம்

90ஸ்களின் கால்பந்தாட்ட ஆடுகளம்
மதுக்கூர் மைதானத்தில் முத்திரை பதித்த கால்பந்து அணிகள்
மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆண்டுதோறும் கால்பந்தாட்ட தொடர்போட்டி வருடத்திற்கு ஒருமுறை என15- நாட்களுக்குள் மிகாமல் நடைபெறும்.
பல ஊர் அணிகளின் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
” பேருந்து நிலையம் முதல் “பள்ளி மைதானம்” வரை மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிக்காக வருகை தரகூடிய ஆட்டவீரர்கள், கால்பந்து ரசிகர்கள் என மிகுந்த பரபரப்பாக காட்சியளிக்கும்.
ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களும் பிற ஊர் அணியின் வீரர்களின் ஆட்டத்திறமையினை கண்டு அந்த ஊர் வெற்றி பெற வேண்டும் ஆசைபட பேசிக்கொள்வார்கள். கால்பந்து ரசிகர்கள்.
நுழைவுக்கட்டணம் 1- ரூபாய், காவல்நிலையத்துடன் ஒட்டியவாறு ஒரு சிறிய ” கீற்றுகொட்டகை” கவுண்டருடன் மாலை 4.30 க்கு பிறகு டிக்கெட் கொடுக்க தொடங்குவார்கள் போட்டியினை நடத்தும் நிர்வாகிகள்.
சிறுவர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் S.S.B காலணி பின்புறம் வழியாக சுவர் ஏறி குதித்தும் மைதானத்திற்குள் உள்ளே வருவார்கள் .முதல் சுற்று ஆட்டம் தொடங்கிய நாள் முதல் இறுதிசுற்று ஆட்டம் நிறைவடையும் வரை நடைபெறும் அனைத்து போட்டிகளும் ஆரவாரமாக இருக்கும்.
1996- அல்லது 97-ஆக இருக்கும்.
வழக்கம் போல் அந்த வருடமும் கால்பந்து தொடர்போட்டி நடைபெற்றது பல ஊர் அணிகளும் பங்கேற்றது. முந்தைய வருட போட்டியில் ” புதுக்கோட்டை குணா” அணி நடப்பு சாம்பியனாக இருந்தது.
இந்த வருடமும் இவர்கள் தான் கோப்பையை தட்டி செல்வார்கள் என ரசிகர்களின் ஆழ்மனதில் தோன்றிய வார்த்தையாக இருந்தது.(mouth talk).
முதல் சுற்று , காலிறுதி போட்டிகள் என நிறைவடைந்த பிறகு, அரையிறுதி ஆட்டத்திற்கு சரிசமமான பலத்துடன் திறமை வாய்ந்த 4- அணிகள் களம் கண்டது.
மதுக்கூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றொரு அணி எந்த ஊர் என்று நினைவில் இல்லை ( *×* அணி ) ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மதுக்கூர் அணியும், திருச்சி அணியும்,எனவும், மற்றொரு அரையிறுயில் புதுக்கோட்டையும் *×* அணியும் களம் கண்டது.
மதுக்கூர் அணி வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள், அரை இறுதியில் திருச்சியை வீழ்த்தி , இறுதி ஆட்டத்திற்கு,தகுதி பெற்றுவிட்டால்.
மற்றொரு அரை இறுதி போட்டியான புதுக்கோட்டை அணியும், *×* அணியும் மோதுகின்ற ஆட்டத்தில், *×* அணி புதுக்கோட்டை அணியை வீழ்த்தினால் , மதுக்கூர் அணி *×* அணியை இறுதிபோட்டியில் வீழ்த்திவிடலாம் என கனவு பட ரசிகர்கள் ஆசைபட பேசி(mouth talk) எதிர்பார்த்தனர்.
முதலாம் அரை இறுதியில் திருச்சி அணி, மதுக்கூர் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் புதுக்கோட்டை குணா அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது.
திருச்சி அணியிடம், மதுக்கூர் அணி தோற்றதும், மதுக்கூர் ரசிகர்கள் புதுக்கோட்டை அணிக்கு பெரிய ஆதரவாக செயல்பட்டனர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதி ஆட்டத்தில் திருச்சி அணியும், புதுக்கோட்டை அணியும் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த தொடங்கின.
ஆட்டம் தொடக்கம் முதலே சூடுபிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு வீரர்களும், தமது அணிக்காக கோல் அடித்துவிட வேண்டும் என ஒவ்வொரு வீரரும் முயற்ச்சிப்பதும் அது தவறுவதும் என முதல் 20- நிமிடங்கள் கடந்தது.
அதன் பிறகு திருச்சி அணி தன்னுடைய முதல் கோலை பதிவு செய்தது. ரசிகர்கள் திருச்சிக்கு ஆதரவளித்து ஆரவாரமாக உற்சாகபடுத்தினர். மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் ” திருச்சி அணி – 2 வது கோல் அடிப்பதற்கும், குணா அணி முதல் கோல் அடிப்பதற்கும் ஆட்டம் படுவிறுவிறுப்பாக நடைபெற்றது . முதல் 45- நிமிடத்தில் தேநீர் இடைவேளைக்காக முதல் பகுதி முடிவடைந்தது.
திருச்சி-1 , புதுக்கோட்டை- 0 என அங்கம் வகித்தது.கோல்கீப்பர் கோல் போஸ்ட்டும் மாற்றப்பட்டது. புதுக்கோட்டை அணிக்கு ஏராளமான ரசிகர்கள் கரகோஷம் எழுப்பிய நிலையில், இடைவேளைக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது .
மிக பெரும் போராட்ட களமாக, இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஓடிக்கொண்டே இருந்தனர்.
புதுக்கோட்டை வீரர்களின் கடுமையான முயற்சியால், பாஸிங் செய்யபட்டு குணாவின் கால்களுக்கு பந்து சென்றது. மின்னல் வேகத்தில் குணா ” குளக்கரை” கோல்போஸ்டில் முதல் கோல் அடித்தார். மொத்த மைதானமும் ரசிகர்களின் சந்தோஷத்தால் ஆரவாரம் பெருக்கெடுத்தது.
இரு அணியும் 1-1 என்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்தது. இரு அணியின் வீரர்களும், அடுத்த கோல் அடிப்பதற்கு தீவீரமாக போராடினர். இரு அணியின் கோல் கீப்பர்களும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் தத்தமது அணியை காப்பாற்றினர் .
1.30 மணி நேரம் நிறைவுபெற்ற நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிந்து “டை பிரேக்கர்”( shoot out) முடிவு செய்யபட்டு இரு அணிகளுக்கும், 5-times kicker கொடுக்கபட்டது.
திருச்சி அணிக்கு அதே கோல்கீப்பர் தடுப்பு பணியில் ஈடுபட்டார். புதுக்கோட்டை அணியில் ” குணா” தடுப்பு பணியை மேற்கொண்டார்.
குளக்கரை கோல்போஸ்டில் “டைபிரேக்கர்” தொடங்கியது .ரசிகர்கள் மைதானத்தின் உள்ளே சுற்றி வளைத்து நின்றுகொண்டு யார் வெற்றி பெற போகிறார் என பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து நின்றனர்.
தொடங்கபட்ட முதல் இரண்டு கிக்குகளில், இரு அணியின் கோல் கீப்பர்களும், மிக திறமையாக தடுத்தனர்.
3- வது கிக்கில், குணா கோல் அடித்தார். மைதானமே அமர்க்களமானது புதுக்கோட்டை 1- 0 என முன்னிலை பெற்றது அதன் பிறகு திருச்சி அணி தீவீரமாக போராடியும் குணாவை தாண்டி பந்து கோல் போஸ்ட் உள்ளே செல்லவில்லை, தடுப்பு பணியை நேர்த்தியாக கையாண்டு, தமது அணியை வெற்றி பெறச் செய்தார். திருச்சி அணி போராடி தோற்றது.
பரிசளிப்பு விழாவில் ஊர் பெரியோர்கள் தலைமையில் நடந்தது . வின்னர், ரன்னர் இரு அணிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து பரிசளித்தனர்.
வெற்றிக்கோப்பையை கைப்பற்றிய புதுக்கோட்டை குணா எங்களுடைய வெற்றிக்கு காரணம் , நாங்கள் விளையாடவில்லை எங்களை உற்சாகபடுத்தி விளையாட வைத்து, வெற்றி பெற வைத்த மதுக்கூர் ரசிகர்களுக்கே இந்த வெற்றி சேரும் என நன்றி உணர்ச்சி பெருக்குடன் பெருமை பட பேசினார். திருச்சி அணி வீரர்களும், புதுக்கோட்டை அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கட்டிபிடித்து வாழ்த்து கூறிக்கொண்டும், ரசிகர்களிடம் கைகொடுத்தும் கொண்டும் விடைபெற்றனர்.
90ஸ்களில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த இரு ஜாம்பவான்களின் வெற்றி பயணம்.
“மதுக்கூர் கிரிக்கெட் கிளப்”
“எலிகண்ட் கிரிக்கெட் கிளப்”
சில நாட்களில்

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR