#அன்புள்ள_சொந்தங்களுக்கு . . .
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் சார்பாக நாம் தன்னலமற்ற பல சமூக சேவைகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பாக அவசர காலத்தில் உயிர் காக்க இரத்ததான சேவை மட்டுமில்லாமல் சாலை விழிப்புணர்வு விபத்தில்லா தேசம் உருவாக்குவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்,தண்ணீரை சேமிப்போம் போன்ற பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,சாலையோரங்களில் மரங்கள் நட்டு பராமரித்தல் போன்ற சேவைகளை செய்து வருகின்றோம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)
சார்பாக நாளை *27/12/2020* #ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு #சமூக_விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் இரத்த கொடையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். எனவே காவல்துறை,மருத்துவதுறை, சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக ஆர்வலர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
ஆகையால் மாணவர்கள், இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.