துணிச்சலான பெண்ணுக்கு பெயர்
“திமிர் பிடித்தவள் “…
மிகச்சரியாக கேள்விகளுக்கு பதில் சொல்லும் பெண்ணுக்கு பெயர் “வாய்க்கொழுப்பு பிடித்தவள்”.
சொந்தங்களை எதிர்பார்க்காமல் கணவனின் வருமானத்தில் செவ்வனே தன் குடும்பத்தை நடத்தும் பெண்ணிற்கு பெயர் “கர்வம் பிடித்தவள்”.
எந்த விஷயத்திலும் உடனடியாக மிகச்சரியாக முடிவு எடுக்கும் பெண்ணிற்கு பெயர் “குடும்பத்தை மதிக்காதவள்”.
வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை சீரோடும் சிறப்போடும் உபசரிக்கும் பெண்ணிற்கு பெயர் “பெருமை பிடித்தவள்”.
எந்த வம்புக்கும் போகாமல் அமைதியாக இருக்கும் பெண்ணிற்கு பெயர் “ஊமை
குசும்புக்காரி”.
செய்யும் தப்பை, தப்பு என்று தைரியமாக சுட்டிக்காட்டும் பெண்ணுக்கு பெயர் “தலைக்கணம் பிடித்தவள்”.
எந்த விஷயமாக இருந்தாலும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் உண்மையை போட்டு உடைக்கும் பெண்ணிற்கு பெயர் “வாயாடி “..
அதிகப்படியான அன்பு காட்டி குழந்தைகளை சீராக வளர்க்கும் பெண்ணுக்கு பெயர் “செல்லம் கொடுத்து பிள்ளைகளை கெடுப்பவள்”..
இன்னும் நிறைய இருக்கிறது .இப்போதைக்கு இது போதுமானது .
அடுத்த பதிவு “பெண்களின் அகராதியில் ஆண்கள்”.
கொஞ்சம் காத்திருங்கள் ….
KNM.முகம்மது இஸ்மாயில் .
23.06.22.