கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

வாட்ஸ்அப் அலப்பறைகள்

வாட்ஸ்அப் அலப்பறைகள் …..
——————————————————————————–
பிரிக்க முடியாதது..
வாட்ஸ்அப்பும் மனிதர்களும்……..
பிரிந்தே இருப்பது …
அட்மின் அறிவுரையும் ,கேட்காத காதுகளும்..
இயல்பாய் நடப்பது ….
ஒரே மனிதர் 100 குருப்புகளில் இருப்பது …
தெரிந்து நடப்பது …
100 குருப்புகளிலும் அதே மெம்பர்ஸ் இருப்பது …..
தெரிந்தே செய்வது ….
ஒரே மெசேஐ 100 குரூப்பிற்க்கும் பார்வேர்ட் செய்வது …
மறக்காமல் நடப்பது ….
குட் மார்னிங்,ஜும்மா முபாரக் ,
குட்நைட்களையும் பதிவிடுவது ….
மறந்து நடப்பது …
சில பதிவுகளை ஆண்டுக்கணக்கில் பார்க்காமல் இருப்பது ..
மக்கள் பார்க்க விரும்பாதது ….
மருத்துவ குறிப்புகளும்…சமையல் குறிப்புகளும் ….
மக்கள் பார்க்க விரும்புவது …
ஊர்பலாக்களும் ,தேவையற்ற சண்டைகளும்..
மக்கள் அதிகம் பார்ப்பது ….
நமதூர் செய்திகளும்..
மையத்து அறிவிப்புகளும் .. ..
மக்கள் அதிகம் பார்க்காதது …
நன்கொடை செய்திகளும் ,நல்லோர்களின் கட்டுரைகள் ,கவிதைகளும் ..
மறதியில் நடப்பது ….
வந்த மெசேஜை பல வருடங்கள் தொடாமல் இருப்பது …
மறக்காமல் நடப்பது ..
வந்த மெசேஜை பார்க்காமலே ஃபார்வேர்டு செய்வது…..
கஷ்டமாக இருப்பது …
அட்மினாக இருந்து வாட்ஸ் அப் குரூப் நடத்துவது ..
இஷ்டமாக இருப்பது …
மெசேஜ்களை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யாமல் கோமாவில் இருப்பது .
அட்மினுக்கு கோபம் வந்தால் …
இருந்தால் குரூப்பில் இருந்து தூக்குவது …
குரூப் மெம்பருக்கு கோபம் வந்தால் ..
தனக்குத்தானே left ஆகுவது …
வாட்ஸ்அப் தோன்றிய காலத்திலிருந்து சுற்றி வருவது ….
இந்தப் பையன் ராமேஸ்வரம் ..விபத்தில் இரண்டு கண்களும் பறிபோய்விட்டது …
வாட்ஸ்அப் பார்க்கும் காலத்திலிருந்து நாம் செய்வது …
இதே மெசேஜை திருப்பி திருப்பி பார்வேர்ட் செய்வது .
குரூப்பிற்கு …அட்மின் …
வெறுப்பிற்கு ….குரூப் மெம்பர்ஸ் (சிலர்)
பொறுப்பிற்கு …அறிவான பதிவுகள் .
சிறப்பிற்கு …மதுரை தென்றல் 2 .
ஐயா …..ஆயிரம் பொற்காசுகள் எனக்கே….
K.N.Mமுஹம்மது இஸ்மாயில்.. மதுக்கூர்

கருத்து தெரிவியுங்கள்