கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

ரமலானே வருக ……..

ரமலானே வருக ………

இறைவா …..இந்த ஆண்டு …..

கொரோனா இல்லாத ரமலான் வேண்டும்.

ஊரடங்கு நீக்கப்பட்ட ரமலான் வேண்டும் ..

பள்ளிக்கு சென்று அமல்களை நிறைவேற்றிடல் வேண்டும் ..

அல்லாஹ்வின் இல்லத்தில் அனுதினமும் பயான்கள் ஒலித்திடல் வேண்டும் .

திருமறையை நிறைவாக ஓதிடல் வேண்டும்.

பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி மணத்திடல் வேண்டும் .

இப்தார் விருந்துகள் ஆங்கங்கே நடந்திடல் வேண்டும்

யாவர்க்கும் பொருளாதாரத்தில் மேம்பாடு
வேண்டும் .

நிறைவாக சக்காத்து பித்ரா கொடுத்திடல் வேண்டும் .

பிரிந்து கிடக்கும் உறவுகள் ஒன்றிணைந்துதிடல் வேண்டும் .

கணவன் மனைவிக்கு ஆடை , மனைவி கணவனுக்கு ஆடை என்ற இறைவனின் சொல் இயல்பில் வந்திடல் வேண்டும்.

மதுக்கூர் புதுப்பள்ளி வேலைகள் முழுவீச்சில் நடந்திடல் வேண்டும்..

நிதி உதவி அள்ளித்தந்து மக்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடல் வேண்டும்..

குழப்பவாதிகளுக்கும் அல்லாஹ் நற்புத்தி வழங்கிடல் வேண்டும் .

அடுத்த ரமலானுக்குள் புதிய பள்ளியில் தொழுதிடும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் இறைவா நீ தந்திடல் வேண்டும் ….

ஆமீன்… ஆமீன்… யா ரப்பில் ஆலமீன் ..

KNM.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் .
08.04.21

கருத்து தெரிவியுங்கள்