உள்ளாட்சி தேர்தல் பரபரப்பில் மதுக்கூர் ..
எல்லோரும் நம்மவர்களே .! நல்லவர்களே !..
யாருக்கு வாக்களிப்பது ?
குழப்பத்தில் மக்கள் ….
வீடுகள் தோறும் வாக்கு சேகரிப்பு
வழக்கம்போல் பொன்னாடை போர்த்தல்கள்..
இந்த முறை சற்று வித்தியாசமாக ….
முன்பு வேட்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது . .
தற்போது வாக்காளர்களுக்கு பொன்னாடை
போர்த்தப்படுகிறது ..
நமது சமுதாயப் பெண்களும் போட்டியிடும் காரணத்தால் அவர்களும்
ஓட்டு கேட்டு வீடு வீடாக வருவது மதுக்கூர் மக்களுக்கு புதிய அனுபவம் .
வாட்ஸ் அப்பில் தேர்தல் பிரச்சாரங்கள்
அனல் பறக்கின்றன .
மொபைல் போன் ஸ்டோரேஜ்கள் வேகமாக நிரம்புகின்றன .
அரசியலில் ஆதாயம் தேடாமல் பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து
கொண்டிருப்பவர்களும்
கட்சிகளின் சார்பில்
கட்சிகளின் சின்னத்தில் களத்தில் இருக்கிறார்கள்.
பேரிடர் காலங்களில் களப்பணி ஆற்றிய காளைகள் களம் காண்கிறார்கள் .
ஊருக்கு உழைத்திடுவோம் என்று கூட்டமைப்பாக கூடியிருக்கிறார்கள் .
இது ஒரு உள்ளாட்சி தேர்தல்தான் …
ஜெயித்து யாரும் கோட்டையை ஆள போவதில்லை …
வெற்றி பெற்றவுடன் தங்கக் கிரீடம் தானாகவே வந்து தன் தலையில் அமர்ந்து கொண்டது என்ற எண்ணம் எள்ளளவும் யாருக்கும் வந்து விடக்கூடாது .
நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் .
பணி செய்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள் .
ஊழல் அற்ற மனிதர்களுக்கு ஓட்டு போடுங்கள் .
இவை அத்தனையும் பொது ஜனங்களின் குரல் …
ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் குப்பைகள் ..
அசுத்தம் ஆகிப்போன நீர் நிலைகள் ..
குளக்கரைகளில் வீசும் துர்நாற்றங்கள் …
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சில
தெருக்கள் ….
இவை அத்தனையும் கடந்த பல ஆண்டுகளில் மதுக்கூர் கண்ட நிகழ்வுகள் .
இவற்றையெல்லாம் அனுபவிக்கும்
மக்கள்தான் இன்றைய வாக்காளர்கள்…
இவைகளெல்லாம் மாற்றம் காண வேண்டுமென்றால் …
மாற்றம் யாரால் தர முடியும் என்று நீங்கள் யாரை தேர்வு செய்கிறீர்களோ …
அவர்களுக்கே வாக்களியுங்கள் …
அழகான மதுக்கூர் வேண்டும் …
ஆரோக்கியமான மதுக்கூர் வேண்டும் ..
ஆக்கப்பூர்வமான மதுக்கூர் வேண்டும் ..
அடிப்படை வசதிகள் கொண்ட மதுக்கூர் வேண்டும் ..
ஓட்டளிப்பது ஜனநாயக கடமை ..அதை
யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம் அது உங்கள் தார்மீக உரிமை ..
சிறப்பானவர்களை தேர்வு செய்யுங்கள் .
நமது ஊரும், மக்களும் வளம் பெறட்டும் …
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 17.02.22
.