07.07.1987 ……
மதுகை சூரியன் இன்று
அஸ்தமமான நாள் .
ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின்
தன்னிகரற்ற தலைவர்
மண்ணுலகம் துறந்து விண்ணுலகம்
சென்ற நாள் ….ஆம்
கம்பனின் இலக்கியத்தை
இலக்கணத்தோடு எடுத்துரைத்த
மதுகை கம்பன் கண்ணியமிகு
TAK முகம்மது யாகூப் மரைக்காயர்
எனும் சகாப்தம் இறைவனின்
அழைப்பை
ஏற்றுக் கொண்ட நாள் ..
மறக்க முடியுமா இந்த நாளை …..?
அசத்தலான ஆளுமை …..
ஜாதி மதம் கடந்த ஒற்றுமை …
யாரிடமும் பாராட்டியதில்லை வேற்றுமை ..
மதுக்கூரின் பெருமைகளை மாற்று
ஊராரையும் பாராட்டி பேச வைத்த திறமை ..
சீர்மிகு இலக்கியவாதி ,
தன்னிகரற்ற பேச்சாளர்,
சிக்கல்களை சீராக்கும்
பேராற்றல் கொண்டவர்,
சிறந்த கல்வியாளர் என
பன்முகத்தன்மை கொண்ட மாமேதை .
நாத்திகராக இருந்து ஆத்திகராக
மாற்றம் கண்டு
ஆன்மீகக் கடலில் மூழ்கி முத்தெடுத்து
மக்களுக்கு பரப்புரை செய்த
மார்க்கத்தின் போர்வாள் ..
இத்தனைக்கும் சொந்தக்காரர்
வரலாற்று நாயகர் மேன்மைமிகு
TAK.முகம்மது யாகூப் மரைக்காயர் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது .
மரைக்காயர் அவர்களின் காலத்தை
மதுக்கூர் மக்களின் பொற்காலம் என்பேன் .
ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம்
பெரும் எழுச்சி பெற்றது .
பழைய மேலப்பள்ளிவாசல் புதிய பள்ளிவாசலாக ஏற்றம் கண்டது …
மூன்று நாள் தொடர்ச்சியாக மதுக்கூரில் இவர்கள் நிகழ்த்திய மிலாதுந்நபி பெருவிழா நிகழ்ச்சி சரித்திரத்தின் சரித்திரம் ஆனது .
இப்படி இவர்களின் செயலாற்றலை
அடுக்கிக் கொண்டே போகலாம்……
மரைக்காயர் அவர்களின் இறப்பு
நமது சமுதாய மக்களுக்கு பேரிழப்பு .
மரைக்காயர் அவர்களை நாம் இழந்து
34 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும்
என்றென்றும் நம் மக்களின் மனதில்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்….
அவர்கள் மறைந்த இந்நாளை மறக்க முடியுமா நம்மால் ?….
இறைவா ……
கண்ணியமிகு TAK முகம்மது யாகூப் மரைக்காயர் அவர்களின் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை அவர்களுக்கு அருளி அருள்வாயாக ..
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.
K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ….07.07.21.