விடைபெறும் ரமலான் ………(2021)
கடந்த ஒரு மாத காலமாக எங்களுடன் உறவாடிய ரமலானே … சென்றுவா ….
உன் வரவால் மனம் மகிழ்ந்தோம் …..
உன் பிரிவால் உளம் நெகிழ்ந்தோம் ….
இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை..
மக்கள் மனதிலோ பெருங்கவலை …
பொருளாதாரத்திலோ மந்தநிலை….
இருந்தாலும் ரமலானே நீ தந்தாய் ஆறுதலை ..
அல்லாஹ்வின் செயல் அனைத்தும் ..
நன்மைக்கே என ஈமான் கொண்ட
மக்கள் நாம் …
இறைவா உன் ஆணை இது என்று
மீண்டும் எதிர்கொண்டோம் இந்நோயை…..
சுட்டெரிக்கும் வெயில் ….
வியாதிகளின் போர் பரணி ..
பள்ளிகளில் தொழுகை இல்லா நிலை ..
இந்த சூழலிலும் எங்களை குளிர்வித்த ரமலானே சென்று வா ..
கடந்த ஆண்டு இருந்தவர்களில் பலர் …
இந்த ஆண்டு இறைவனின் திருவடியில் …
இந்த ஆண்டு பலருக்கு இந்த ரமலான் இறுதி ரமலான் ஆக கூட இருக்கலாம் …
அனைவருக்கும் வியாதிகளில்
இருந்து விடுதலை கொடுத்து ….
நீண்ட ஆயுளை எங்களுக்கு தா இறைவா என்று மறை தந்த மாபரனிடம்
அழுது புலம்பி வேண்டுகோள் யாம் விடுத்ததாக சொல் …..
ரமலானே உன் வரவால் …
அமல்களை அழகாகச் செய்தோம் …
திருக்குர்ஆனோடு சங்கமம் ஆனோம் …இன்று நீ செல்கிறாய் என்ற ஏக்கத்தோடு
பிரியாவிடை அளிக்கிறோம் ….
சென்று வா ..ரமலானே சென்று வா ..
மீண்டும் உன் வரவை எதிர் நோக்கி மீண்டும்
உம்மத்துக்கள் காத்திருக்கின்றன …
உயிர் துடிப்போடு விடை தருகின்றோம் ..
மா சலாம் …மா சலாம் ..பி அமானல்லா. .
ஈகைத் திருநாளை இனிமையாக கொண்டாடும் அன்பு நெஞ்சங்கள் அனைவர்களுக்கும் எங்கள் இதயம் நிறைந்த
“ஈதுல் பித்ர்”நல்வாழ்த்துக்கள்..
K.N.M.முகம்மது இஸ்மாயில் & குடும்பத்தார்கள்
மதுக்கூர்
14.05.21