Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

விடைபெறும் ரமலான் …

விடைபெறும் ரமலான் …


மாதம் முழுவதும் எங்களை மகிழ்வித்த ரமலானே சென்று வா…சலாமுன் அலைக்கும்..

மனிதர்களை புனிதர்களாக ஆக்க வந்த ரமலானே சென்று வா . சலாமுன் அலைக்கும் .

கொளுத்தும் வெயிலிலும் நோன்பைத் குளுழுமையாக்கி தந்த ரமலானே சென்று வா .
சலாமுன் அலைக்கும் ..

அமல்களின் அணிவகுப்பை அழகாக கொண்டு தந்த ரமலானே சென்று வா. ஸலாமுன் அலைக்கும் .

புசித்து களித்திருந்த வயிற்றுப் பிரதேசங்களுக்கு பசியை உணர்த்த வந்த ரமலானே சென்று வா . .ஸலாமுன் அலைக்கும்.

மனித உடம்பில் மறைந்து கிடக்கும் வியாதிகளை குணமாக்க வந்த ரமலானே சென்று வா .ஸலாமுன் அலைக்கும்.

கடையநல்லூர் நகர் தோன்றிய நோன்புக் கஞ்சியை உலகத்தாரை ஈர்க்க செய்த மாதமான ரமலானே சென்று வா.
சலாமுன் அலைக்கும் …

பள்ளிவாசல்கள் அனைத்திலும் அலைகடலென மக்களை ஒன்று சேர்த்த ரமலானே சென்று வா.
சலாமுன் அலைக்கும் …

திருக்குர்ஆன் வசனங்களால்
எங்களின் செவிகளையும் இதயங்களையும் நிறைக்கச் செய்த ரமலானே . சென்றுவா சலாமுன் அலைக்கும்.

சென்று வா.. ரமலானே சென்று வா. மீண்டும், மீண்டும் நீ வரும் போது உன்னை அடையும் பாக்கியம் எமக்கு வேண்டும்..

அருள்புரிவாய் யா ரஹ்மானே..
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் …

அல்ஹம்துலில்லாஹ் ,ஜஸாக்கல்லாஹ்
ஃபிஅமானில்லாஹ்…மா அஸ்ஸலாம…

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 30.04.22.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR