யார் மீது கோபம் உனக்கு ?
ஏன் இப்படி கொட்டி தீர்க்கிறாய் ?
அளவோடு நீ பெய்தால்தான் …..
வளமோடு யாம் வாழ முடியும் …..
அளவைக் கடந்து பொழிகின்றாய் …..
அத்துமீறி வீடுகளுக்குள் நுழைகின்றாய்….
மழையே நில் ……
பதியம் போட்ட பயிர்களை பாழடித்தாய் …
கதிர் அடித்த நெல்மணிகளை முளைக்கச் செய்தாய் ….
சாலையையும் பாலங்களையும் மூழ்கடித்தாய்.
போக்குவரத்து வசதிகளை முடக்கம் செய்தாய் .
காய்கறி விலைகளை உயர்த்தி வைத்தாய் .
தக்காளியை தங்கமாக மாற்றி வைத்தாய்…
மழையே நில் ….
ஏரி குளங்களை நிரப்பி வைத்தாய் …
நீர் அதனை ஊர் முழுக்க பரப்பி வைத்தாய்..
காட்டாற்றால் வயல்களை மூழ்கச் செய்தாய்..
ஓட்டாண்டியாய் விவசாயியை புலம்ப வைத்தாய் .
மழையே நில் …..
பெய்து கெடுத்தது போதும் நின்றுவிடு…
மழை இல்லா இடம் நோக்கிச் சென்று விடு ..
அடுத்தாண்டு பருவ மழையாய் வா .
அதுவரை வேண்டாம் சென்று விடு …..
K.N.M.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் . 27.11.21.