கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மழை……

மழை……
———————-
கார்த்திகை பிறந்தது ..வானில்
காரிருள் சூழ்ந்தது ….
மழையின் துகல்கள் சிதறிய முத்துக்களாய்..
பூமிப்பந்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது …
உஷ்ணக் காற்றும்,
உலராத வியர்வையும்,
ஏ.சி .காற்றின் குளுமையும்….
பிரியா விடை பெற்றன ….
வானவில்லும்…
வானில் மிதக்கும்
வைகறை மேகங்களும்..
வளைகாப்பு நடத்தி மகிழத் தொடங்கின …
குற்றால மலையின் சாரல் துளிகளும்..
கொடைக்கானலின் குளிர் காற்றும் …
மூணாரின் மூடுபனி கூட்டமும் ..
நமது ஊரை நோக்கி புலம் பெயர்ந்தது ….
வயல் பரப்புகளில்…. வறட்சியால்
வாடி நின்ற பயிர்கள்
வானை நோக்கி உயர்ந்து..
வசீகரமாய் காட்சி தர தொடங்கியது .
வறுத்த கடலைகளும் ,
பொரித்த சமோஷாக்களும் …
அடித்த புரோட்டாக்களும் …ஆஹா
என்னமாய் ருசிக்கின்றன…..
அதிகாலை பொழுதில் பறவையினங்களும்…..
இரவு நேரங்களில் தவளைகள் கூட்டமும்… மழையின் வருகையினால் இன்னிசை
கச்சேரி நடத்த தொடங்கின….
இவ்வுலகில் தான் படைத்த….
ஜீவன்கள் அனைத்திற்கும் ..
இறைவன் இலவசமாக காட்டும்
வாண வேடிக்கை இந்த மழை …
குளம், கிணறு,ஏரி ஆகிய நீர் நிலைகளை நிரப்ப வேண்டி
ஆண்டுதோறும் ஆஜர் ஆகி விடும்
அமுதசுரபி இந்த மழை ….
அன்று மதுக்கூரில் அடாது மழை பெய்யும்பொது அனைத்து வீடுகளிலும் அவித்த மரவள்ளிக் கிழங்கும்,
ரவா உப்புமாவும்தான் பிரதான உணவு என்பதை பலர் மறந்து இருக்க வாய்ப்பில்லை ..
வறுமையினால் அல்ல பொருட்கள் வராமையால் …
மழையே வா …..
உன் வருகையால் மகிழ்ந்தோம்….
நேரத்திற்கு வா.. நேரத்திற்குள் சென்று விடு..
காரணம் நீ பெய்தும் கெடுப்பாய்….
பெய்யாமலும் கெடுப்பாய்….
மீண்டும் மீண்டும் வா …..
பசுமையான வாழ்க்கையை எங்களுக்கு தா…
KNM.முஹம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .

கருத்து தெரிவியுங்கள்