கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

பரிதாபத்தில் சாலை ….

பரிதாபத்தில் சாலை ….
           ———————————
நூருல் இஸ்லாம் தெருவிலிருந்து
பழைய கபர்ஸ்தான் பிரதான வழி  வரையில் ….
சேறும் சகதியும் கலந்து
உலை நிறைந்து உருக்குலைந்து கிடக்கும் சாலை ….

எருமை மாடுகள் கூட கடந்து செல்ல யோசிக்கும் இந்த பாதையில்தான் ..
மனிதர்கள் நாம் நடந்தும், வாகனத்திலும் கலக்கத்தோடு கடந்து செல்கிறோம் …

முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் முன்னிலையில் …
ஷாஜகான் ஹோட்டலில் புகை கூட்டம் பூபாளம் இசைக்க ..
வெள்ளை கைலிகள் சேற்றின் சாயம் பூசிக் கொள்ளும் சுந்தர காட்சி அன்றாடம்  அரங்கேற்றம் ஆகிறது….. 

பழைய அடக்கஸ்தலம் மூடப்பட்டதால் புதிய ஜனாஸாக்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தில் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்கள்
வடிக்கின்ற கண்ணீர்தான்
இந்த பாதையில் குளமாக கொப்பளிக்கின்றதோ ?

என்ன இப்படி கிடக்கிறதே என்று பார்ப்போர் வாயெல்லாம் முனுமுனுக்கின்றதே தவிர
முயற்சி செய்து சீராக்கும் பணி செய்ய   முயற்சிப்போர் யாருமில்லை …

ஒரு காலம் வரும் சாலை செப்பனிடப்படும்
என்ற நம்பிக்கையில் உண்மை உண்டு .
அந்த காலம் வெயில் காலம்தான்.
சுள் என்று அடிக்கும் வெயிலில்
சாலை தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும்…
மனிதர்கள் செய்யாததை இயற்கை செய்யும்.

இந்த சீரற்ற பாதை
சர்க்காரின் சொத்தா ? தனியார் சொத்தா ?
யார் சொத்தாக இருந்தாலும்…
யார்தான் சரியாக்குவது ?.
எப்போதுதான் சரியாவது ? விடை
கிடைக்குமா தோழர்களே ?..

“நமக்கென்ன” மதுக்கூரில்
இதெல்லாம் சகஜமப்பா ……
விடிவு காலம் வருமா ?
காத்திருப்போம் படைத்தவன் வழி காட்டுவான் …

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் …20.01.2021

கருத்து தெரிவியுங்கள்