மதுக்கூரில் பிறந்து பார் …..
மனிதம் மிக்க மனிதனாக உருவெடுப்பாய் ….
மதுக்கூரில் பிறந்து பார் …..
மண்வாசனைக்கு நீ மரியாதை கொடுப்பாய் ..
மதுக்கூரில் பிறந்து பார் …
மனிதநேயத்தை மற்றவருக்கு கற்றுக் கொடுப்பாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …..
புது குளத்தின் மீது கூட தீரா காதல் கொள்வாய் …
மதுக்கூரில் பிறந்து பார் …
மாற்றாரை நேசிக்கும் மனப்பக்குவம் பெறுவாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …..
உறவுகளால் நீ உளம் மகிழ்ந்து போவாய் ….
மதுக்கூரில் பிறந்து பார் …..
மைத்துனர்களிடம் அண்ணன்
தம்பிகளை விட நெருக்கமாகி போவாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …..
அறம் செய்ய விருப்பம் கொள்வாய் …
மதுக்கூரில் பிறந்து பார் ..
பார்க்கும் திசையெல்லாம் பட்டதாரிகள் நிறைந்திருப்பதை கண்டு பரவசம் அடைவாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …..
பொது நலத்தில் சுயநலத்தை தவிர்ப்பாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …..
மற்றவரை குறை கூறல் குற்றமென்று எடுத்துரைப்பாய் ..
மதுக்கூரில் பிறந்து பார் …..
பதவி சுகம் காணல் பண்பற்ற செயல் என்பாய்.
மதுக்கூரில் பிறந்து பார் …..
ஆடம்பரம் இல்லா திருமணத்தை ஆதரிப்பாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …..
பிரிவினை என்ற சொல்லை அகராதியில் இருந்தே பிரித்தெடுப்பாய் ….
மதுக்கூரில் பிறந்து பார் …..
ஒற்றுமையை நிலைநாட்டுவதில் உறுதியாய் இருப்பாய் ..
மதுக்கூரில் பிறந்து பார் …..
கெட்ட எண்ணங்களுக்கு குட் பை சொல்லி வாழ்வாய் ..
மதுக்கூரில் பிறந்து பார் …..
தர்மம் செய்வதிலேயே தலைமகனாய் திகழ்வாய் ….
மதுக்கூரில் பிறந்து பார் …
பொறாமை இல்லாத புது உலகம் இது என்பாய்.
மதுக்கூரில் பிறந்து பார் …
வட்டி வாங்குதல் தவறு என்று வாழும் நம் சமுதாயத்தினரை எண்ணிப் பெருமை கொள்வாய் .
மதுக்கூரில் பிறந்து பார் …
இது “நமக்கென்ன மதுக்கூர்”அல்ல
“நம்முடைய மதுக்கூர்” என்று மார்தட்டிக் கொள்வாய் .
குறிப்பு : இந்தக் கவிதையை படித்துவிட்டு “கவிதைக்கு பொய் அழகு ” என்கின்ற சிந்தனைக்குள் நீங்கள் சென்றால் நான் பொறுப்பல்ல .
இந்தக் கவிதையை பற்றி உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் .
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 02.02.2022.