கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

நிவர் புயல் ……

நிவர் புயல் ……

கஜாவின் கடைசி தம்பி இவன் …..
வருகிறேன் வருகிறேன் என்று
சில நாட்களாக மக்களை
கலக்கத்தில் வைத்திருக்கும்
இன்றைய கதாநாயகன் இவன்…

நம்மை கடக்க நினைக்கிறான் ….
கடந்து போ …கவலை இல்லை …ஆனால்
மனிதகுலத்திற்கு துன்பமும்,துயரமும் தராமல்
வேகம் குறைத்து நகர்ந்து போ……

மனித உயிர்கள் மதிப்பு
மிக்கவை என்பதை மாண்புடன்
உணர்ந்து விரைவை குறைத்து
விவேகத்தோடு நடந்து போ …

கால்நடைகளும் காக்கப்பட
வேண்டியவையே என்று எண்ணி,
கடுமையை குறைத்து 
கண்ணியத்தோடு கடந்து போ ..

பலன் தரும் மரங்களும்,
பசுமையான பயிர்களும்….
பாவங்கள் என்று நினைத்து ..
பவித்திரமய் தவழ்ந்து போ  …

நிவர் புயல் என்றதொரு பெயர் தாங்கி
பேரிடர் தர வருகை தரும் பெருந்தகையே ,
பெருமழை, கொடும் காற்று என
பெயரெடுத்த அருந்தவமே….

ஆணவம் நீக்கி,
அடக்கத்தோடு ஊர்ந்து செல் …
கஜாவில் கஜானாவை தொலைத்த மக்கள் யாம் .
மீளத் தொடங்கியிருக்கிறோம் தற்போது ..
மீண்ட எங்களை மீண்டும் மிரட்டாதே …

போய் வா என்று கூற மாட்டோம் ..
போ… போ… போ… போய் விடு   ….
திரும்பிப் பார்க்காதே..திரும்பவும் வராதே …..

KNM.முகமது இஸ்மாயில் .
மதுக்கூர் .
25.11.20

கருத்து தெரிவியுங்கள்