கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

சீரற்ற சீர் வரிசை ஏன் ?

திருமணம் பேசி முடித்தவுடன் மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் இருந்து சீனி வாடா, அல்வா மற்றும் பணியாரங்களை வாங்கி ஊர் முழுக்க வினியோகம் செய்கிறீர்களே ஏன் ? ஏற்கனவே சுகர் பேஷண்டாக இருக்கும் மக்களுக்கு சுகரை ஏற்றி விடுகிறீர்களா ?.

திருமணம் முடிந்து 40 நாட்கள் வரை கையில் மைதா, டீ தூள் ,எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களுடன் பெண் பார்க்கப் போகிறேன் என்று பெண் வீட்டிற்கு நமதூர் பெண்கள் படையெடுக்கிறார்களே ஏன் ?.திருமண வீட்டார் என்ன மளிகை கடையா வைக்க போகிறார்கள் ?.

திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை
மாப்பிள்ளைக்கு பசியாற செய்து அனுப்புங்கள் என்று 100 பரோட்டா, 100 முர்தபா, இடியாப்பம் கோலியப்பம் , கஞ்சி மேலும் 10 கிலோ ஆட்டுக்கறி போட்டு கறியானம் இவைகளை பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுப் பெறுகிறார்கள் . இவ்வளவையும் சாப்பிடுவதற்கு  மாப்பிள்ளை என்ன பீமனா ? அல்லது கடோத்கஜனா ?

தலைப் பிரசவத்திற்காக பெண்ணை மாமியார் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அழைப்பு என்ற ஒரு சம்பிரதாயத்தை கடைப்பிடித்து அதற்கான சீர் வகைகள் பெண் வீட்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு அழைத்துச் செல்ல
வருபவர்களுக்கு புரோட்டா கறி கொடுத்து அழைத்துச் செல்கிறீர்களே ஏன் ?
இந்த செய்முறை இல்லாவிட்டால் குழந்தை பிறக்காதா என்ன ?.

தலைப் பிரசவத்திற்காக முழுச் செலவையும் பெண்ணின் தாய் விட்டாரே செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது ஊரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது . இது ஆண்டவன் கட்டளையா ? அல்லது அன்னிய மதத்தில் இருந்து இறக்குமதியா ?

முடிந்துவிடவில்லை…… இன்னும் வரும் ….

அனுபவசாலிகள் இதுகுறித்த தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம் .
இது நமது ஊர் விவகாரம் .வெளியூர் குரூப்களில் பகிர வேண்டாம் .

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் 21.12.21.

கருத்து தெரிவியுங்கள்