Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

புத்தாண்டு தினத்தின் நம்பிக்கைகள் ..

புத்தாண்டு தினத்தின் நம்பிக்கைகள் ..

ஆங்கில வருடம் முதல் நாளில் பல மூட நம்பிக்கைகளை நம் சமுதாய மக்கள் சிலர்  கடைபிடித்து வருகிறார்கள் . இவர்கள் கொண்டிருக்கும் முழுமையான நம்பிக்கை ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் இந்த ஆண்டு முழுதும் இருப்போம் என்பதுதான் .

இந்த முழு மூட நம்பிக்கையை  பின்பற்றியவர்களாக ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று அவர்கள் செய்யும் காரியங்கள்…

365 நாட்களிலேயே தலைசிறந்த நாள் ஜனவரி 1 என்று தீர்மானிக்கிறார்கள் .

முதல் நாளே வீட்டை கூட்டி கழுவி சுத்தம் செய்கிறார்கள்.

முதல் நாள் இரவில் இருந்தே புத்தாண்டு வாழ்த்து பரிமாற்றங்களை தொடங்கிவிடுகிறார்கள் .

ஃபஜர் தொழுகைக்கு எழாதவர்கள்  ..
அதிகாலையிலேயே எழுந்து விடுகிறார்கள் .

பொழுது விடிந்த உடன் குளித்துவிட்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறார்கள் .

புத்தாடை அணிந்து கொள்கிறார்கள் …

வீட்டில் நெய் சோறு கறிக்குழம்பு அல்லது பிரியாணி சமைக்கிறார்கள் .

ஒரு சிலர் மட்டும் தங்க ஆபரணங்களை அணிந்து கொள்கிறார்கள்.
பிள்ளைகளுக்கும் அணிவிக்கிறார்கள் .

உடல் நலக்குறைவு ஏற்பட்டால்  மருத்துவமனைக்கு செல்வதில்லை .
(வருடம் முழுதும் செல்ல வேண்டி வருமாம்)

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தொழுதுவிட்டு இறைவனிடத்தில் துவா கேட்கிறார்கள் இந்த ஆங்கில புத்தாண்டை (இயேசு கிறிஸ்து பிறந்ததாக உலகத்திற்கு அறியப்பட்ட நாள் ) முன்னிட்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த ஆண்டு முடியும் வரை நாங்கள் வளமோடும் நலமோடும் வாழவேண்டுமென்று .

எனதருமை மக்களே சிந்தியுங்கள் …

அல்லாஹ்வின் ஆணைப்படி அறியாமையில் கிடந்த மக்களை தட்டி எழுப்பி அறிவு சார்ந்த மக்களாக மாற்ற அண்ணல் எம் பெருமானார் பட்ட கஷ்டங்களை அறிந்ததில்லையா நீங்கள் ?

அறிந்த பின்னும் அறியாமையை நோக்கி , அறிவுக்கு எட்டாத மூடப்பழக்கங்களை நோக்கி மீண்டும் படை எடுக்கிறீர்களே ஏன் ?

சிந்தியுங்கள். செயல்படுங்கள். அல்லாஹ்  பாதுகாப்பை தருவானாக .ஆமீன்…

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர். 31.12.21

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR