புதிய அடக்கஸ்தலம் …..
நான் …..
எழில் கொஞ்சும்
ஏரிக்கரை அருகில் .
9 மா,90 குழி பரப்பளவில் …
9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு
வாங்கப்பட்டு உபயோகத்திற்கு வராமல்
பல ஆண்டுகளாக
துயில் கொண்டிருந்த
புதிய கபர்ஸ்தான் பேசுகிறேன் ….
16 ஆண்டுகளாக
கோமாவில் கிடந்த நான் ….
மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றிருக்கிறேன்…
துபாயில் SSMH முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் செயல்பட்ட ….
மதுக்கூர் முஸ்லிம் பொதுநல அமைப்பு நிர்வாகிகளின் கடும் உழைப்பின் மூலம் ..
மதுக்கூரில் ஜனனம் ஆனேன் .
ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் சொத்து ஆனேன் . ..
என்னை வாங்குவதற்கு
தன்னை வருத்திக் கொண்டவர்கள் பலர் ..
ஜனாஸாக்களை தாங்கிக்கொள்ள இருக்கும் என்னையே ஜனாசாவாக ஆக்கி
அடக்கம் செய்துவிட்டு மகிழ்ச்சியால் திளைத்தவர்கள் சிலர் …
முஸ்லிம் பொது நல அமைப்பின் நிர்வாகிகள் உயிர் கொடுத்து உழைத்தார்கள் …
ஒவ்வொருவரின் பெயரையும் நான் எடுத்துரைக்க எண்ணுகின்றேன். ..
ஆனால் இயலாது என்னால் ..காரணம்
இவர்கள் ஒவ்வொருவரும் விளம்பர விரும்பிகள் அல்ல …
அல்லாஹ்விற்கு பயந்து செயல்பட்டவர்கள் .
அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை தேடுபவர்கள் ….
2004ஆம் ஆண்டு நான் பத்திரப்பதிவு செய்யப்பட்டேன் …
2020 ஆம் ஆண்டு உங்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறேன்……
அல்ஹம்துலில்லாஹ் ……
2004ஆம் ஆண்டு இடம் வாங்கப்பட்டவுடன்
சுற்றுச்சுவர் எடுக்கும் முழு தொகையதனை ..அன்று
12 ஆண்டுகள் அசையாமல் பொறுப்பிலிருந்த
ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகத்திடம் முஸ்லிம் பொதுநல கமிட்டி வழங்கியது ..
10 ஆண்டுகளுக்குப் பிறகு ,
சுற்றுச்சுவர் எடுக்கும் பணியில் ..
நிதி பற்றாக்குறை…
வசூலித்து நிவர்த்தி செய்தவர்கள் துபாய் சுன்னத் வல் ஜமாத் அமைப்பினர்…
2020 ஆம் ஆண்டு இறுதியில்
மக்கள் நலக்குழு அமைப்பினர்
வேகத்தோடும் விவேகத்தோடும் இறுதி பணியை செவ்வனே நிறைவு செய்து பயன்பாட்டிற்கு வழி வகுத்தனர் ….
செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளிலும் தற்போது பொறுப்பிலிருக்கும் ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பு நல்கியது.
இந்த நிகழ்வுகளிலிருந்து ஒரு
விஷயத்தைப் இறைவன் உங்களுக்கு உணர்த்தி இருக்கிறான் .புரிந்து கொள்ளுங்கள் மக்களே ….
முஸ்லிம் பொது நல அமைப்பு இடம் வாங்கி
சுற்றுச்சுவருக்கான பணத்தையும் வசூல் செய்து அளித்திருக்கிறது …..
அன்றே இப்பணியை செய்திடாத காரணத்தால்
விலைவாசி உயர்வால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை சுன்னத் ஜமாத் அமைப்பு வசூல் செய்தளித்திருக்கிறது ..
மக்கள் நலக் குழு அமைப்பு
இறுதிப் பணியை மாண்புடன் நிறைவு செய்திருக்கிறது ..
ஜாமியா மஸ்ஜித் பரிபாலன கமிட்டியில் தற்போதைய நிர்வாகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பை நல்கி இருக்கிறது ..
நீங்கள் பலபல அமைப்புகளாக பிரிந்து கிடந்தாலும் ..
கொள்கை ரீதியாக மாறிப்போய் இருந்தாலும்..
கட்சி என்ற பெயரில் பிளவுபட்டுக் கிடந்தாலும்
அத்தனை பேரும் ஒன்றிணைந்துதான் என்னை ஹயாத்தாக்கி இருக்கிறீர்கள் …
இனிவரும் காலங்களில் ….
ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்தால்தான் எந்த ஒரு காரியத்தையும் இலகுவாக நிறைவேற்ற முடியும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்தியிருக்கிறான்
எனவே புதிய பள்ளிவாசல் கட்டும் பணியிலும் ஒரே அணியில் ஒன்று கூடுங்கள் …
என்னை விலைகொடுத்து வாங்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர
உழைத்த ஒவ்வொருவரும் சிந்திய
வியர்வைத் துளிகளை
ஏக இறைவன் சொர்க்கத்தின்.. படிக்கட்டுகளாக மாற்றி அருள்புரிவானாக ஆமீன்..
என்று உங்களுக்காக நான் துவா செய்கிறேன் ..
இப்படிக்கு ,
புதிய அடக்கஸ்தலம் ..
ஏரிக்கரை மதுக்கூர் .
கவிதை ஆக்கம் ..KNM.முகமது இஸ்மாயில் .
12.11.2020.