அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்..
அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்..
அவள் என்னை முத்தமிடும்போது சொல்ல நினைக்கிறேன்..
அவள் என்னை மடியில் கிடத்தி கொஞ்சி குலாவும் போது சொல்ல நினைக்கிறேன்.
அவள் என்னை இறுக அணைத்துக்கொண்டு
உறங்கும்போது சொல்ல நினைக்கிறேன்..
எத்தனை முயற்சித்தும் என்னால் சொல்ல முடியவில்லை….
கடவுளே!! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு.. என்னை ஈன்ற தாயை நான் “அம்மா” என்றழைக்க..
(பிறந்த குழந்தையின் மைண்ட் வாய்ஸ்)
அன்னையர் தின வாழ்த்துக்கள் ….
KNM.முகம்மது இஸ்மாயில் .
08.05.22.