மதுக்கூரில் நடக்கும் திருமண வைபவங்களை பற்றி திருவள்ளுவர் என்னிடம் கனவில் வந்து சொன்ன திருமணத்துப்”பா”..
———————–
“கற்க கசடற நபிவழியை கற்றபின்
திருமணத்தை நடத்துக அதற்குத் தக ..”
” யாகவராயினும் உடல் காக்க திருமணத்தில் பிரியாணி சாப்பிடாமல் இருப்பதே நன்று .”
” எப்பொருள் யார் யார் வாங்கிக்கொண்டு பெண் பார்க்க சென்றாலும் ..
மேரி பிஸ்கட்டை தவிர வேறு எதுவும் கிடைப்பது அரிது …. “
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே திருமணத்திற்கு அழையாவிடில் முறிந்திடுமே நட்பும் உறவும் ….. “
” கல்யாணத்தில் சுவை இல்லா பிரியாணி கொடுத்தே கொல்கின்றார் …ஆதலினால் மாந்தரெல்லாம் நெய்சோறு தேடி அலைகின்றார் .. “
” மணமுடிக்க முன்னாலே பெண் பேசி வைப்பது நன்றன்று என்பர் …
தம்ருட்டு நானாகத்தான் வாங்கி கொடுத்தே தன் சொத்தை இழப்பர்… “
” பச்சை போடுதல் என்ற பழக்கமும் ஒன்று உண்டு ….
தன் இச்சைக்கு செலவினங்களை கூட்டிவிட்டுக் எடுத்திடுவார் பெண்டு ….. “
” நன்றி மறப்பது நன்றன்று …
மாப்பிள்ளைக்கு பெரும் பசியாற கேட்டு இன்னல் தரும் மணமகன் வீட்டாரை அன்றே மறப்பது நன்று. “
” மணப்பெண்ணை விட தன்னை அலங்கரித்துக் கொள்வர் பெண்கள் ..
அஃதில்லையேல் திருமணத்திற்கு செல்வதையே தவிர்த்து தவிப்பர். “
“பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
கொழுந்தியா இல்லாத வீட்டில் பெண் எடுத்தோர் …. “
” குஸ்கா என்பர் ,கட்டுச்சோறு என்பர் , கஞ்சி சோறு என்பர் ….
இவை எல்லாம் திருமண மண்டபத்தில் பிரியாணிக்கு இட்ட பெயர் … “
” பால்குடம் கொடுத்தல் என்றதொரு பழக்கம் ஒன்றுண்டு ..
பெண்டிருக்கு மட்டுமே புரோட்டா கறி கொடுப்பர் இது நன்றன்று . “
” நல் பொருத்தம் கண்டு மணமுடித்த நிலையதனை மாற்றி..
பொருள், பொன் பார்த்து மணமுடித்து வாடுகின்றார் பலர் தூற்றி. “
” தொட்டதற்கெல்லாம் சீர் கேட்கும் ஆண் விட்டார் …..
சீர் கெட்ட செயல் இது என்பதை என்று உணர்வர் … “
” குறை கூறி புது பெண்ணை கொடுமை செய்யும் மாமியார் நாத்தனார் . ..
இறை கோபத்திலிருந்து மீள்வதென்பதறிது. “
” துன்பமும் துயரமும் கொண்டு துவள்வர் …
தன் நிலை தாண்டி ஆடம்பர திருமண செலவு செய்தவர் . “
குறிப்பு …..
இந்த பதிவு கொஞ்சம் சிரிப்பதற்காக ..
நிறைய சிந்திப்பதற்காக ….
நமது ஊர் திருமண நிகழ்வுகளில் ….
அனாவசிய செலவுகளும்,வீண் விரயங்களும் குறைக்கப்பட வேண்டும்,
தவிர்க்கப்பட வேண்டும்..
சிந்திப்போம்..செயல்படுவோம்.
செயல்படுத்துவோம்..
கருத்தாக்கம் …
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .
01.01.2021