கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மதுரை ஆதீனம் …..

மதுரை ஆதீனம் …..

மத நல்லிணக்கத்தின் மணிமகுடமாக  திகழ்ந்த மாமனிதர் ….

இஸ்லாம் அறிந்த இனிய மனிதர்
இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்..

கோவிலின் மடாதிபதியாக
இவர் வாழ்ந்தாலும்…..

திருக்குர்ஆனும் பேசுவார் …
பைபிளும் பேசுவார் …

பல இஸ்லாமிய மேடைகளில்
இஸ்லாத்தின் போதனைகளை
கம்பீரமாக முழங்கி இருக்கிறார்.

பெண்கள் புர்கா அணிவது,புனிதமானது  பாதுகாப்பானது என்று பறைசாற்றியவர் ..

அன்று ஷரீஅத் சட்டத்தை திருத்தலாம்
என்று கையெழுத்திட்ட ஜாபர் ஷரீப் எனும்  முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியை  …..

தவறு செய்கிறீர்கள் நீங்கள் ….
ஷரீஅத் சட்டம் இஸ்லாமியரான
உங்களுக்கு தெரியவில்லை
என்றால் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என எதிர் சவால் விட்டவர் ….

தமிழ் கடல் கிருபானந்தவாரியாரின்
மறு வடிவம் என்று கூட சொல்லலாம்….
ஆழ்ந்த தமிழறிவு பெட்டகம் …
அழகிய இலக்கியம் பேசும் தமிழறிஞர் .

நாகூர் ஹனிபா அவர்கள் மீது
அளவற்ற அன்பு கொண்டவர் ..
“பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா” பாடலை நேசித்து பாடியவர்..

ஆதீனங்கள் ஆதீனங்களாகவே மட்டும் வாழ்ந்து விட்டுப் போகும் இந்த சூழலில்
அழகிய முன்மாதிரியாக பன்முகத்தன்மை கொண்ட ,..
மதம் கடந்த மனித நேயத்தோடு வாழ்ந்து சென்றவர்…

இவரது மறைவு தமிழ் சமுதாயத்திற்கு மாபெரும் பேரிழப்பாகும் …

இவர் ஆற்றிய தொண்டு,
அனைத்து சமுதாயத்தினரையும்
அரவணைத்த செயல்பாடுகள்…
என்றென்றும் அனைவர்களின்
மனதிலும் நீங்காமல் நிலைத்திருக்கும் ….

K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 14.08.21

கருத்து தெரிவியுங்கள்