கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

மதுக்கூரின் பொற்காலம் ….

மதுக்கூரின்  பொற்காலம்  …. 

மக்கள் குவியும் செவ்வாய் சந்தை….

சுத்தமான ஆற்றின் கரைகள் ….

போக்குவரத்து நெரிசல் இல்லா பேருந்து நிலையம் …..

கீற்றும் , ஓடுகளும் வேய்ந்த வீடுகள்…..

அங்குமிங்குமாக சில மாடிவீடுகள்…..

நீர் நிறைந்த புதுக்குளம் …

நட்பு பாராட்டும் அண்டைவீட்டார் …

தொலைபேசி இல்லாத வீடுகள் …

வஞ்சகமில்லாமல் மனிதர்கள் ..

முறிவே இல்லாத திருமணங்கள் ..

பள்ளி விட்டதும் கடைகளில் பணிபுரியும் பையன்கள் …

வறுமையிலும் வசந்தமாய் வாழ்ந்த சீமான்கள் .

வாட்ச் கட்டிக்கொண்டு சைக்கிள் வைத்திருக்கும் பணக்கார பசங்கள்…

விவசாயமும்,வியாபாரமும் வாழ்வாதாரமாக கொண்டிருந்த மக்கள் .

சண்டை சச்சரவுகள் இன்றி கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த உறவுகள்  …

சொந்தங்களை விட்டுக்கொடுக்காத சொந்தங்கள் …..

தனியார் பள்ளிகள் இல்லாத கல்வி நிலையங்கள் …

வியாதிகள் வெகுண்டு ஓடும் சுகாதார சூழல்..

அண்ணா மெடிக்கல்ஸ் மட்டுமே மக்களின் பிணி தீர்க்கும் மையம். வயதாகிவிட்ட நிலையிலும் ஆரோக்கியமாக வாழ்ந்த மக்கள் …

நம்மைக் கண்டவுடன் ஓடி ஒளியும் மாமன் மகள்.

எழுபது வயதானாலும் மருமகனை பார்த்து வெட்கப்பட்டு மறைந்து கொள்ளும் மாமியார் .

வழுக்கை விழாத ஆண்களின் தலைகள்…

இப்படி ……… எத்தனை முறை எழுதினாலும் திகட்டாத நெஞ்சை விட்டு அகலாத மதுக்கூரின்  பொற்காலம் மீண்டும் திரும்புமா ?….. வாய்ப்பில்லை ராஜா….. வாய்ப்பில்லை …

வசந்தகால நினைவுகளுடன் ….

KNM.முகம்மது இஸ்மாயில் .

மதுக்கூர் . 18.09.21

கருத்து தெரிவியுங்கள்

madukkur.com

FREE
VIEW