கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

போர்க்களத்தில் இவர்கள்

போர்க்களத்தில் இவர்கள் ……

SDPI (பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா)மதுக்கூர் .
TNTJ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) மதுக்கூர்.
TMMK ( த மு மு க ) மதுக்கூர்.

மதுக்கூர் கொரோனா யுத்தகளத்தில் 
போராளிகளாக இவர்கள் …..

அமைப்புகள் பிரிந்திருந்தாலும் ..
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
போராடும் இந்த போராளிகளின் நோக்கம் மக்கள் இடுக்கண் களைவதை தவிர வேறொன்றுமில்லை…..

நமது ஊரில் இந்த அமைப்புகள் 
கொரோனா போர்க்களத்தில் போராடும்
காட்சி கண்டு இந்த தியாக நிகழ்வுகளை எடுத்துரைப்பது என் கடமை என
மீண்டும் ஓர் கவிதை சமைத்தேன்….

நன் முத்துக்களாய் இந்த அமைப்புகளில் தங்களை அர்ப்பணித்துக்
கொண்டிருக்கும் நம் வீர மறவர்கள்
மதுக்கூர் மக்களுக்கும்
நமது ஊரைச் சுற்றியிருக்கும்
கிராமங்களில் வாழும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற அரிய பொக்கிஷம் .

த மு மு க போராளிகள் உள்ளூர் வெளியூர் என
நல்லடக்கம் செய்த உடல்கள் 37.

SDPI (PFI) போராளிகள் உள்ளூரிலும், வெளியூரிலும்
நல்லடக்கம் செய்த உடல்கள் 5.

TNTJ போராளிகள்  விக்ரமம் கிராமத்தில் நல்லடக்கம்  செய்த உடல்கள் .2..

இந்த கொரோனா மரணங்கள் நமதூர் மக்களுக்கு அச்சத்தையும் துக்கத்தையும் நிறைவாகவே தந்திருக்கிறது . 

ஒரே குடும்பத்தில் மூவர் மரணம் அடைந்ததை என் ஈரக் குலைக்குள்ளே ஈட்டியை பாய்ச்சியதை போல் உணர்கிறேன் .

ஜாதி மத பேதமின்றி கொரோனாவில் மரித்த உடல்கள் நல்லடக்கம்.
ஆம்புலன்ஸ் சேவை ..
கொரானா பேரிடர் மீட்பு மையங்கள்  ,
ஆக்ஜிஸன் வினியோகம் ,
கபசுர குடிநீர், ஏழைகளுக்கு உணவு..
என்று மதுக்கூர், மற்றும் சுற்று வட்டாரத்தையே கொரோனா நெருங்காமல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர அரும் பாடுபடுகிறார்கள்   ….

கட்சிப் பணிகளில் மும்முரம் காட்டுவதை விட 
மிரட்டும் கொரோனாவை விரட்டும் களப்பணியில் இவர்கள் காட்டும் தீவிரம் பிரமிக்க வைக்கிறது…

மதுக்கூர் மக்கள் நலனுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் நமது ஊரின்  அத்தனை இயக்கங்களுக்கும்
ஒரு சாமானியனாக என்னுடைய
மனம் திறந்த கேள்வி …..

நமது ஊரின் எல்லா அமைப்புகளுமே  
நம் சமுதாயத்திற்காக,
நமது மக்களுக்காக ஏதோ ஒரு வகையில் உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் .

கஷ்டம் வரும் போது ஓடிப் போய்ப் 
உதவுவதில் முனைப்பு காட்டி
முன் வரிசையில் நிற்கிறீர்கள் .

                     ஆனால்

முன்வரிசையில் முண்டியடிக்கும் நீங்கள்
ஓரணியில்  நின்று இருந்தால் இந்த உலகத்தையே நம் கைக்குள் அடக்கி இருக்கலாமே ?.
இது என்னுடைய ஆதங்கமே தவிர குற்றச்சாட்டு அல்ல .

தொடரட்டும் உங்கள் பணி …..
நமது ஊரை விட்டு அகலட்டும்
கொரோனா எனும்  பிணி…
களப்பணியில் கலக்கும் உங்களை புகழ்வதற்கும், பாராட்டுவதற்கும்  
என்னிடம் வார்த்தைகளே இல்லை .

இறைவா ….

போராளிகள் யாவரையும் ..
அவர்களின் குடும்பத்தார்களையும் ……
தொற்றும் கொடும் நோயின் ..
ஆபத்துக்கள் ஏதுமின்றி பாதுகாத்து,
ரஹ்மத்துகளை அள்ளி வழங்கி 
அருள்புரிவாய் யா ரஹ்மானே .

ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் …..

KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ….22.06.21.

கருத்து தெரிவியுங்கள்

madukkur.com

FREE
VIEW