கேள்வி. ஒரு செயலை செய்தாலும் தவறு . செய்யாவிட்டாலும் தவறு . அது என்ன செயல் ?
பதில் .போதையில் இறைவனை வணங்குவது ..
போதையோடு இறைவனை வணங்குவது தவறு.
போதையோடு இருக்கின்ற காரணத்தால் இறைவனை வணங்காமல் விடுவது தவறு .
—————————–
ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்குக் காரணம்….
பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்குக் காரணம்..
—————————–
வாழ்க்கையில் எல்லா உறவுகளும் நிரந்தரமாக வேண்டுமென்றால்…..
சிறு இடைவெளி அவசியம்….!!!!!
—————————-
சிலரின் மெளனம் திமிரல்ல ….
அவர்களுக்குள் இருக்கும் வலி…..!!!!
———————–
பிடிவாதக்காரரிடம்
வாதாடக் கூடாது..
முடிவெடுத்தவரிடம்
விவாதிக்கக் கூடாது..
புரிந்து கொள்ளாதவரிடம்
பேசவே கூடாது..
K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ..11.06.22.