கோழியின் மரண சாசனம் – காலையில்
கொக்கரக்கோ என்றேன்..
மதியம் குக்கருக்குள் வெந்தேன்!!!!
உங்களுக்கு துன்பம் வருகையில், உங்கள் சொந்தங்களும் நண்பர்களும் உங்களுக்கு பின் நிற்பார்கள்..
சந்தேகம் இருந்தால், உங்கள் திருமண ஆல்பத்தை பாருங்கள்..!!
நிலவை பார்..
கடவுளின் ரசனை புரியும்..
சூரியனை பார்.. கடவுளின் சக்தி புரியும்..
கடலைப் பார்…
கடவுளின் ஆளுமை புரியும் ..
கண்ணாடியை பார், கடவுளின் காமெடி புரியும்…
வேலைக்குபோனா எல்லாம் சரியாயிடும்.. கல்யாணம் பண்ணுனா எல்லாம் சரியாயிடும்.. குழந்தை பொறந்தா எல்லாம் சரியாயிடும்..இப்படி சொல்லி சொல்லி நம்மை வீட்டிலேயே உட்கார வைத்து இருப்பவனை தூக்கிப்போட்டு மிதிச்சா எல்லாம் சரியாயிடும்…
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 16.05.22.