தோற்றுப் போவோம் ….
———————–
அம்மாவிடம் தோற்று போ….
அன்பு அதிகரிக்கும்..
அப்பாவிடம் தோற்று போ,
அறிவு மேம்படும்..
ஆசானிடம் தோற்று போ…
கல்வி வளம் பெறும் .
மனைவியிடம் தோற்று போ..
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
பிள்ளைகளிடம் தோற்று போ,
பாசம் பன்மடங்காகும்..
சொந்தங்களிடம் தோற்று போ,
உறவு பலப்படும்..
நண்பனிடம் தோற்று போ,
நட்பு உறுதிப்படும்..
ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி உறுதி !!!.
சிறு குறிப்பு …மனைவியிடம் தோற்றுப் போகும்போது நினைவில் கொள்ளுங்கள் ஒரு முறை தோற்றால் வாழ்நாள் முழுதும் தோற்றுப் போக வேண்டி இருக்கும்..
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 24.05.22.