” இறைவன் மிகப்பெரியவன்” …. என்ற அரபுச்சொல் ” அல்லாஹு அக்பர் “
இந்தச் சொல் உலக மக்களை இன்று இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது …
இந்தச் சொல்லை அனைத்து சமய மக்களும் ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறார்கள் .
“முஸ்கான் கான்” எனும் இளம் வீரத்திருமகள் , ஹிஜாப் மத அடையாளம் என்று சொன்னதை சிம்ம குரலால் ஓங்கி ஒலித்து உடைத்தெறிந்து இருக்கிறாள் .….காரணம் ஹிஜாப் என்பது பெண்களின் பாதுகாப்பு கேடயம் என்பதை உணர்ந்ததால் வந்த ஆவேசம் .
புர்கா அணிவது பெண்களுக்கு பாதுகாப்பானது என்று மதுரை ஆதினம் அன்று மாண்போடு பகன்றது மறந்து போனதா ?.
அன்றைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் …தன் சீடர்களுக்கு அறிவுறுத்தினாரே … “அதிகாலைப் பொழுதில் “அல்லாஹு அக்பர்” என்று பள்ளிவாசலில் பாங்கு ஒலிப்பதை காது கொடுத்து கேளுங்கள் என்று ….” அந்த வரலாறு தெரியாதா உங்களுக்கு ?
இளம் சிறார்களின் மனதில் நஞ்சை ஏன் விதைக்கிறீர்கள் …. மதவெறிக்கு சிறுவர்களை ஏன் சீரழிக்கிறீர்கள்..?
சகோதர சமய பெருமக்களே ……
ஹிஜாப் நீங்களும் அணியலாம் ..
திருக்குர்ஆன் நீங்களும் படிக்கலாம் ..
வட்டி வாங்குதலை நீங்களும் தவிர்க்கலாம் …
வரதட்சணை வாங்குதலை புறம் தள்ளலாம் .
கல்வி கற்க முன்னுரிமை கொடுக்கலாம் .
தான தர்மங்கள் நிறைவாக வழங்கலாம் .
இவை அனைத்தும் இஸ்லாம் மதத்தின் அடையாளங்கள் அல்ல . ஏக இறைவனால் உலக மக்களுக்கு அறிவுரையாக வழங்கப்பட்ட…
மனிதன் மனிதனாக வாழ்வதற்கான அடையாளங்கள் .
நெஞ்சுறுதி கொண்ட”முஸ்கான்கானே”
உன்னைப்போல் பிள்ளைகள்
வளர்க்கப்பட வேண்டும் .
வளர்ப்போம்..வளர்வோம்
இறைவன் பெரியவன் என்பதை உலகத்தாருக்கு உணர்த்துவோம் .
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் . 10.02.2022.