கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

சுதந்திரம்

சுதந்திரம் 

சுதந்திர தினக் கொண்டாட்டம் ….
அரசு அலுவலகங்களில்..
கட்சி தலைமையகங்களில்..
கோலாகலத் கொடியேற்றம்…….

முகலாயர்கள் கட்டிய டெல்லி செங்கோட்டையில் ….
தலைப்பாகையோடு பாரத பிரதமரும் …

சென்னை மெரினா கடற்கரையில் ….
அரசு மரியாதையோடு    .
தமிழக முதல்வரும் …

குதூகலமாய் கொடியை ஏற்றினார்கள் ….

எங்கே சுதந்திரம் ? யாருக்கு சுதந்திரம் ?
சுதந்திரத்தை அனுபவிப்பார்கள் யார்  ?
வரிசைப்படுத்துகிறேன் வாருங்கள் …..

ஆயிரங்களில் கோடிகளை ,
கொள்ளையடித்தவர்களுக்கு ,
அயல்நாடு தப்பிச்செல்ல சுதந்திரம் …..

டெல்லியில் போராடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து
சில பண முதலைகளின் பையை நிரப்ப திட்டங்கள் தீட்ட ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் .

மீத்தேன் திட்டங்களையும் ,
ஸ்டெர்லைட் ஆலைகளையும்
மக்களுக்கு ஆபத்து இல்லை .
என்று சொல்ல
தலைவர்களுக்கு சுதந்திரம் ….

பெப்சி, கொக்கோ கோலாக்களுக்கு ,
தாமிரபரணியில் எடுக்கும் தண்ணீரை ,
எவன் தடுத்துவிட முடியும் என்று ,
தமிழனுக்கே சவால்விட …..
கார்ப்பரேட்காரனுக்கு சுதந்திரம் …

ஆஷிபா சிறுமியையும்,
பொள்ளாச்சியில் சில நூறு
பெண்களையும் கற்பழிக்க காமக்கொடூரன்களுக்கு
சுதந்திரம் ….

கண்முன்னே இக்கொடும் செயல் நடந்தும்
அதை நியாயப்படுத்தி வாதாட வழக்கறிஞர்களுக்கு சுதந்திரம்..

தேர்தல் களத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு
ஓட்டு போட்டு ஜனநாயகக் கடமை ஆற்றுகிறேன் என்று
ஜனநாயக படுகொலை
செய்ய மக்களுக்கு சுதந்திரம்….

இந்திய திருநாட்டின் சுதந்திரத்தை
பெற்றுத் தந்த..
அண்ணல் காந்திஜியை ,
சுட்டுக்  கொன்றவனுக்கு
சிலை வைத்து வழிபட சுதந்திரம் …

கொரோனா காலத்திலும் கொள்ளை கொள்ளையாய் கொள்ளையடிக்க
அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் ….

இன்னும் தொடரும் சுதந்திரங்கள் …
இதுவா நாம் பெற்ற சுதந்திரம் ?
என் இதயம் கணக்கிறது …..
எழுத இயலவில்லை என்னால் …

இது போன்ற சுதந்திரத்தைப் பெறவா
ஜாதி மத பேதமின்றி..
சுதந்திர போராளிகள் தம் இன்னுயிர்களை ஈந்தார்கள் ?…

இறுதியாக எனது ஒரே ஒரு கேள்வி ?

சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த இந்திய பெருங்குடி மக்களே !!
உங்களின் இதயத்தின் அடித்தளத்திலிருந்து பதிலை கூறுங்கள் ….

சுதந்திர தினத்தை நீங்கள்…… சந்தோஷமாகத்தான் கொண்டாடினீர்களா ?அல்லது ……….
சம்பிரதாயத்திற்காக கொண்டாடினீர்களா ?

நானும் சுதந்திர தினத்தை  மறவாமல் ஆண்டுதோறும் கொண்டாடுகிறேன் ….
ஏன் தெரியுமா ..?…

நான் விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை ,
வருடா வருடம் நினைவு படுத்திக் கொள்வதற்காக ……

ஜெய் ஹிந்த் ……..

KNM.முகம்மது இஸ்மாயில்
மதுக்கூர் …16.08.21.

கருத்து தெரிவியுங்கள்

madukkur.com

FREE
VIEW