Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

என் நினைவலைகளில் KNM அப்துல்மாலிக் .

என் நினைவலைகளில் KNM அப்துல்மாலிக் .
——————-
மதுக்கூர் வட்டாரத்தில் ,
அண்ணா மெடிக்கல் அப்துல்மாலிக் என்றால்
அறியாதவர்களே இல்லை எனலாம் ,
அனைவருக்கும் அறிமுகமான அன்பு மனிதர் .
 
ஈகையின் இலக்கணம் … எப்போதுமே இருந்ததில்லை தலைக்கணம் ….
இல்லை என்ற சொல் இவரது
வாயிலிருந்து வந்ததே இல்லை
 
பன்முகத்தன்மை கொண்ட பகுத்தறிவுவாதி ,
உலகவியல் இவரது உள்ளங்கையில் ,
தமிழ் பற்றுக்கொண்ட பேச்சாளர் , இவர்
சீறாபுராணமும் பேசுவார் ,
சீராக ராமன் கதையும் பேசுவார்,
 
இஸ்லாமிய பெண்பிள்ளைகள் எல்லாம் ,
பருவம் அடைந்த உடன் படிப்பை நிறுத்தி விட வேண்டும் என்கிற நமது ஊரின்
கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து….
 
பாத்திமா மரியம் என்ற பள்ளியை நிறுவி
பெண் பிள்ளைகள் உயர்கல்வி தொடர ,
பள்ளியின்
வாசல் கதவை திறந்து வைத்த கல்வியாளர் .
 
இன்றைக்கும் நமது ஊரில் ..,
இஸ்லாமிய பெண் பட்டதாரிகள் உருவாக
இவர் மூலமாக இருந்திருக்கிறார் ,
இல்லை இல்லை மூளையாக
இருந்திருக்கிறார் ..
 
உறவுமுறையில் எனக்கு
சகோதரன் என்றாலும் , நல்ல நண்பனாக என்னோடு வலம் வந்திருக்கிறார் ,,,
என் தரம் உயர உரமாக இருந்திருக்கிறார்.
 
மருத்துவம் படிக்காத மருத்துவத் திலகம் ,
இலக்கணம் படிக்காத இலக்கியவாதி ,,
நாத்திகம் அறிந்திடாத நாத்திகர் , பிறகு
இறைவனை உணர்ந்திட்ட ஆத்திகர் .
 
பாத்திமா தன் தந்தையின் தாயார் பெயர் ,
மரியம் தன் தாயாரின் தாயார் பெயர்,
இரு பெயர்களையும் இணைத்து ,
பாத்திமா மரியம் பள்ளி என்று பெயரிட்ட
நீண்ட நெடிய சிந்தனையாளர் ….
 
யா இறைவா ,
 
இவர் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை,
மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை அருளி அருள் புரிவாயாக …
 
இவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் பொறுமையையும் ,மன
அமைதியையும் கொடுப்பாயாக..ஆமீன் .
 
KNM.முகம்மது இஸ்மாயில் .
13.04.2020.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR