மனிதநேயம் …..
மதுக்கூர் தமுமுக ..
என்ன மனிதர்கள் இவர்கள் …?
எங்கே தம்பிகளா இருந்தீர்கள் இத்தனை காலம் ?
நினைத்துப் பார்த்தாலே உள்ளம்
சிலிர்க்கிறது …..
மனிதநேயத்தின் மணிமகுடமாக ….
பொதுச் சேவையின் புனிதர்களாக …
தம் உயிரைத் துச்சமாக்கி
நல்லடக்க பணி புரியும் …இந்த
தன்னலமற்ற தங்கங்களை நினைத்தால் உள்ளம் நெகிழ்ச்சியில் கலங்குகிறது .
மதுக்கூரில் தினம் தினம் மரணங்கள் ..
வீட்டிலிருந்து மருத்துவமனை,
மருத்துவமனையிலிருந்து அடக்கஸ்தலம் என்கின்ற நிலைப்பாட்டிற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் ….
மரணித்த உடல்கள் வீட்டிற்கு வருவதில்லை.
கொல்லும் தொற்றை பற்றி கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல்
நல்லடக்க பணிகளை துணிச்சலாக செய்யும் தமுமுக செயல் வீரர்களே ..
உங்களுக்கு என் ராயல் சல்யூட் …
உறவுகள் ஓரமாக ஒதுங்கி விட்டாலும்….
நண்பர்கள் நகர்ந்து சென்று விட்டாலும் …
தங்கள் உயிரைப் பணயம் வைத்து…..
உறவினர்களாக… நண்பர்களாக….
உடனிருந்து அடக்கம் செய்யும் இந்த
தமுமுகவின் தியாக இளைஞர்களின்
ஈரமான இதயங்களுக்குள் இஸ்லாம்
ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்த செயல்பாட்டின் ஆணித்தரமான உண்மை.
ஜாதி மத பேதமின்றி
நீங்கள் அடக்கம் செய்த
அனைத்து உடல்களில் ஆன்மாக்களும்
அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக
பரிந்துரை செய்யும்.
மாற்று சமய சகோதரர்கள்
தங்கள் வணங்கும் கடவுளுக்கு
அடுத்தபடியாக உங்களைத்தான் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் ….
மனிதநேயத்தின் உச்சமாக
இப்படியும் ஒரு செயல்பாடு இருப்பதை
உலக மக்களுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள்…..
அமரர்களை அழகான முறையில் நீங்கள் வழியனுப்பும் விதம் கண்டு என் கண்கள் பனிக்கிறது ….
உங்களைப் பாராட்டுவதை விட …
உங்களை போற்றிப் புகழ்வதை விட …
உங்களை சரித்திரத்தில் சங்கமிக்கச் செய்வதைவிட ….
உங்களுக்காக ……
உங்களின் குடும்பத்தார்களுக்காக …..
உங்களின் முழு பாதுகாப்பிற்காக ….
ஏக இறைவனிடம் நெஞ்சம் உருகி துவா கேட்பதே சிறப்பு என்று எண்ணுகிறேன் ….
எல்லா வகையிலும்,எந்த நிலையிலும் ,
உடல் ரீதியாகவும் ,மன ரீதியாகவும்
உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை அருளி அருள உலகாளும் இறைவனிடம்
என் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் …
ஆமீன்..ஆமீன்…யாரப்பல் ஆலமீன்…
K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ….14.06.21.
???????????