கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

K.M.M.அப்துல் ரவூப் (இரங்கற்பா )

K.M.M.அப்துல் ரவூப் (இரங்கற்பா )
———————————————————-
புன்னகை தவழும் முகம் ….
பொலிவுடன் கூடிய அகம் …..
பகைமைகள் இல்லா பழக்கம் …..
குணத்தில் கலங்கரை விளக்கம்…..
 
சிறப்பான குடும்பத்தில் இவர் பிறப்பு …
பொறுப்பாக வாழ்ந்தது
இவர் சிறப்பு.
வாழ்நாட்கள் பொறுமைகளின் தொகுப்பு …
மறக்கவே முடியாது இவரது புன்சிரிப்பு…
 
தீவிரமான இறை நேசர் …..
முழுமை பெற்ற நபி நேசர் ….தன்
சகோதரரோ (அப்துல் காலித் ) பேரறிஞர் ….
கண்ணியம் பேணுவதில் பேரரசர் …
 
துபாய் உழைப்பின் தொடக்க நிலை …தன்
உழைப்பால் கண்டார் உயர்ந்த நிலை …
உறவைப் பேணுவதில் இமயமலை …
ஒளிவு மறைவு இல்லா உண்மை நிலை…
 
தீங்கு எதுவும் எவருக்கும் செய்ததில்லை …
தேறாத செயல் எதையும் தொட்டதில்லை ..
யாரையும் மதியாமல் விட்டதில்லை ….
எவரையுமே வார்த்தைகளால் சுட்டதும் இல்லை.
 
பிள்ளைகளுக்கு நல்லதொரு தந்தை ஆனார் ..
மனைவிக்கு நல்லதொரு கணவன் ஆனார் ..
குடும்பத்திற்கு நல்லதொரு தலைவரானார் ..
நல்லவர் என்ற சொல்லுக்கு சொந்தமானார் …
 
உயர் பதவி(துபாய் நிறுவனத்தில்)வகித்த போதும் கர்வம் இல்லை ..
துயர் கண்ட போதும் இவர் துவண்டதில்லை..
தலைக்கணம் இவருக்கு இருந்ததில்லை ..தீன்
இலக்கண நெறி இன்றி வாழ்ந்ததில்லை.
 
இத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரர் ..
“அப்துல் ரவூப்”எனும் எனது சொந்தக்காரர்..
இறையவனின் திருவடியை தொட்டு விட்டார் ..
இளைப்பாற இப்போது அங்கே சென்றுவிட்டார் …..
 
“அப்துல் ரவூப்”எனும்
பொறுமை பூங்காற்றே ……
 
அன்று கல்லூரி வரை சென்று கல்வி கற்றாய் …..
திறமையையும் ,அறிவையும் வளர்த்துக் கொண்டாய்……
இன்று மறுமையை நோக்கி பயணம் சென்றாய் .
ஏன் சென்றாய் என என்னை
கேட்க வைத்தாய்..
அல்லாஹ்வின் அழைப்பிற்கு மறுப்பு ஏது
என விளங்க வைத்தாய் …..
 
உன்னைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ..
என் அனுதாபங்களும்….ஆறுதல்களும் …..
 
மறுமையில் உந்தன் பிழை பொறுத்து,
உன் நிலை நந்நிலை ஆகிட வேண்டி
மறை தந்த இறைவனிடம்
மன்றாடி துவா கேட்கிறேன் ….
 
ஆமீன் .ஆமீன் .யா ரப்பில் ஆலமீன் ..
 
KNM.முஹம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் .07.09.2020

கருத்து தெரிவியுங்கள்