தேர்தல் திருவிழா ……..
முடிந்தது தேர்தல் ….வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் ….
வாக்காளப் பெருமக்களே என்கின்ற… செவிகளை செவிடாக்கிய
ஒலிபெருக்கி சப்தம் நின்றுபோனது …
சாமானிய மனிதர்களை பார்த்து குனிந்து கும்பிடு போட்ட வேட்பாளர்கள் இனி
கூப்பிட்டாலும் ஐந்தாண்டுகளுக்கு வரப்போவதில்லை …
உங்கள் பாதம் தொட்டு ஓட்டுக்கு கேட்கிறேன் என்று சொன்னவர்களில் சிலரை இனி நம் பாதம் தேய்ந்தாலும் பார்க்க முடியாது …
துணி துவைத்து கொடுத்து ஓட்டு வேட்டையாடியவர்கள் இனி நம் வீட்டுப்பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்….
தோற்றுப் போவோம் என்று தெரிந்தும் கூட
சில வேட்பாளர்கள் தேர்தலில் நின்றதை பார்க்க பாவமாகத்தான் இருந்தது …..
கட்சிக்கொடிகளுக்கும் ,
விளம்பர பதாகைகளுக்கும் ,
தலைவர்களின் வரவேற்பு வளைவுகளுக்கும் செய்யப்பட்ட செலவுகளில் ஐம்பது பள்ளிக்கூடங்களை கட்டி இருக்கலாம் ..
இந்த முறை இலவசங்களின் விளம்பரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது .
வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் என்பது கிண்டல்களின் உச்சம்….
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓட்டுக்கு பணப் பட்டுவாடா …
பணம் வாங்கியவர்களை விட பணப்பட்டுவாடா செய்தவர்கள்
பணக்காரர்கள் ஆகி போனார்கள்.
கட்சிக் கொடியை ஏந்தி களப்பணி ஆற்றிய
தொண்டர்கள் கூட்டம் ..
காய்ந்து கருவாடாகி நிறம் மாறிப்போனார்கள்.
மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வந்த
அச்சகங்களும்,பூமாலை கடைகளும்,
ஒலிபெருக்கி நிலையங்களும்
ஓய்வெடுக்க தொடங்கிவிட்டன …
புத்தாடை பூண்டு புதுப்பொலிவோடு செயல்பட்ட
தேர்தல் அலுவலகங்கள்
ஐந்து ஆண்டுகள் நீண்ட விடுப்பில்
பிரியா விடைபெற்றன.
234 தொகுதிகளிலும் வென்று
நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என பரப்புரையில் முழங்கிய
பெரும், குறும் தலைவர்கள்
நான்தான் முதல்வராவேன் என்று பகல் கனவு காண தொடங்கியிருக்கிறார்கள் …..
(கடந்த தேர்தலில் விஜயகாந்த் கண்ட கனவு )
வெற்றி நடை போடும் தமிழகம் மீண்டும்
தொடருமா ?????????….
விடியல் தரப்போகும் திராவிட சூரியன் அரியாசனத்தை அலங்கரிக்குமா ?
மொத்தத்தில்
பாசிசம் ஒழிய வேண்டும்
ஒழிக்கப்பட வேண்டும் ….
தமிழனை தமிழன் தமிழனாக ஆள வேண்டும்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
களங்கம் இல்லாமல் காக்கப்பட வேண்டும்..
இதுதான் நம் இலக்கு ..
விடை தரப்போவது மே 2 …
அதுவரை மௌனம் காப்போம்…
நடப்பவைகள் அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும்….
தமிழன் என்று சொல்லடா ..
தலை நிமிர்ந்து நில்லடா……
KNM.முகம்மது இஸ்மாயில் ,
மதுக்கூர் .
06.04.2021