Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

ஈதுல் ஃபித்ர்…..

ஈதுல் ஃபித்ர்…..

ஈகை செய்தலுக்கென்றே ஒரு நாள் ..
இன்பங்கள் பொங்கி வரும் திருநாள் .

வரியோருக்கு, வலியோர் வாரி,வாரி வழங்கிட
நாயன் தந்ததொரு நன்நாள்.

மருதாணி நிறம் சுரக்க மங்கையர்கள் கரம் சிவக்க….
மகிழ்வோடு கொண்டாடிடும் பொன்நாள் . …

புரோட்டாக்களை கறி ஆனம் ஆலிங்கனம் செய்து சுவை கூட்டி தரும் கறி (மட்டன்) நாள் …

துபாய் ஜப்பான் புடவை விற்பனையாளர்களை பணக்காரர்கள் ஆக்கிய நன்நாள்….

நெய்யில் சுட்ட புரோட்டா ,
குறும்பு ஆட்டுக்கறி குழம்பு , இடியாப்பம் ,கோலி அப்பம்,வட்டலப்பம் ,
மட்டன் லாப்பா, கடற்பாசி ,
சேமியா கஞ்சி என வகை ,வகையாய் …
வாகாய் சமைத்து எடுத்து …

தலைப் பெருநாள் கொண்டாடும் புது மாப்பிள்ளைமார்களுக்கு காலையில் பசி ஆற்ற, 
பெண் வீட்டார் மகிழ்வோடு (?)
விருந்தளிக்கும் திருநாள்.

சிறார்களை சிறகடித்து பறக்க வைக்கும் சிறப்புகள் பிறக்கும் நாள் .

அழகான அமல்களுக்கு ..
அங்கீகாரமும், நற்கூலியும்,
அல்லாஹ் நமக்கு அளிக்கும் நன்நாள் …

இத்தனை சிறப்பு மிக்க இந் நாள்..
ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள்…

இந்த நன்னாளில் என் நெஞ்சில் நிறைந்த யாவருக்கும் என் இனிய ஈதுல் ஃபித்ர்..
பெருநாள் நல் வாழ்த்துக்கள் …

தகப்பலல்லாஹு_
மின்னா_வமின்கும்.

K.N.M.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் .
03.05.22.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR