இறைவா …..
உலகப் படைப்பாளனே…….
அகிலத்தின் தலைவனே ……
மனிதர்களை மன்னிக்கும் மகத்துவமிக்கவனே…
நெருப்பு நாட்களுக்குள் எங்களை பயணிக்க வைத்திருக்கிறாய்…..
கொரோனா என்னும் கொடும் நோய் …
கொத்துக் கொத்தாய் மடியும் மனித உயிர்கள் ..
மருத்துவர்களே மாண்டு போகும் பரிதாபம் ..
வாட்ஸ்அப்பும் முகநூலும் மரண அறிவிப்பு பலகைகளாய் மாறிவிட்ட அவலம்…
நோயின் கொடூரம் ஒருபுறம் ….
சிகிச்சை கிடைக்காத நெருக்கடி மறுபுறம் …
ஆக்சிஜனும் மருந்துகளும் பற்றாக்குறை வேறொரு புறம் ….
பொருளாதாரத்தில் மந்த நிலை ….
பொறுத்துக்கொள்ள இயலாத வறுமை அலை .
பயத்தில் உறைந்து போன மக்கள் …
உறக்கம் தொலைந்துபோன ராத்திரிகள்..
மறக்க முடியாத உறவுகளின் மரணம் …
இறைவா …..உலக படைப்பாளனே …..
இத்தனை கஷ்டங்களை எங்களுக்குள் ஏன் விதைத்தாய் ?…
இந்தக் கொடிய நோய் நீ எங்களுக்கு தந்த படிப்பினையா ?..அல்லது தண்டனையா ?
படிப்பினை என்றால் கற்றுக்கொள்கிறோம்.
தண்டனை என்றால் ஏற்றுக் கொள்கிறோம் .
மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவன் நீயே.
மாண்பிற்ககுரிய உன்னிடமே யாம் சரணம் …..
உலக மக்களுக்கு உயிர்ப்பிச்சை கொடு …
கொடும் நோய் இதனை கொத்தோடு பிடுங்கி எடு …..
எங்கள் அவல குரல்களுக்கு அபயக் கரம் நீட்டு.
உன் ஒருவனையே முழுமையாக நம்பி உறுதியோடு காத்திருக்கிறோம் ….
K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ..
21.05.21