இரங்கற்பா …
அப்துல் கஃபார் ……
சமுதாய மணம் வீசிய சந்தன மலர் இன்று பிரியாவிடை பெற்றுக் கொண்டுவிட்டது
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் …
நேர்கொண்ட பார்வை …
மதம் கடந்த மனிதநேயம் …
பொறுமையின் பூங்காற்று ..
சமுதாயச் சிந்தனை மட்டுமே தன் சுவாசம் ..
தமுமுகவின் தன்னலமற்ற தொண்டன் …
MTCTயின் இணையற்ற செயல் வீரர் …
மதுக்கூரில் பல ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அச்சாணி …
இவைகள்தான்……
சகோதரர் அப்துல் கஃபார் அவர்களின் வாழ்க்கைப் பயணம் …
இந்த சகோதரனின் மறைவு மதுக்கூரின் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பு..
ஏற்றுக்கொள்ள இயலவில்லை இவர் மறைவை …என் செய்வது …
ஏற்றுத்தான் ஆகவேண்டும் இறைவன் தீர்ப்பை.
ஏற்றுக் கொண்டோம் இறைவா …
பாவம் மனிதர்கள் நாங்கள்
மறுக்க இயலுமா உன் கட்டளையை ….?
இறைவா …..
இவரின் மண்ணறையை பொன்னறை ஆக்கு .
இவரை பிரிந்து வாடும் இவர் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடு…..
இவர் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் மன்னித்து சொர்க்கத்தை
இவருக்கு சொந்தமாக்கி அருள் புரிய வேண்டுகிறேன் ரஹ்மானே……
ஆமீன்… ஆமீன்… யா ரப்பில் ஆலமீன் …
KNM.முகம்மது இஸ்மாயில்.
மதுக்கூர் .
04.04.2021