Madukkur
கவிஞன் - by Janab KNM Mohamed Ismail

தொடங்கியது ரமலான் ……

தொடங்கியது ரமலான் ……
———————
சூரியக் கதிர்கள் வெயில் கம்பளம் விரிக்க
பொலிவோடு தொடங்கியது ரமலான் ..

எல்லா ஆண்டுகளிலும் போல் இந்த ஆண்டும் பிறை ஒன்றில் குழப்பம் ….

அவர்கள் ஒரு நாள் முன்னாடி ..
இவர்கள் ஒருநாள் பின்னாடி ..ஆனால் அனைவருக்கும் நபிகள் நாயகமே முன்னோடி.

தராவிஹ் ரக்காயத்துகளில்
குழப்பம் ஏதுமில்லை வழக்கம்போல்
அவர்கள் 8 . இவர்கள் 20 ..

இப்போதெல்லாம் நாங்கள்
சொல்வதுதான் சரி என்று யாரும்
மார்க்க விவாதங்கள் செய்வது இல்லை .

மார்க்க விஷயங்களில்
அவரவர் கொள்கைகளில்
அவரவர் பயணிக்கிறார்கள் .
லகும் தீனுக்கும் வலியதீன் …

நோன்பு தொடங்கிவிட்டதால்
இறையச்சம் நம் மக்களுக்கு
நிறைவாகவே கூடிப் போகும் …

ஐவேளைத் தொழுகைக்கும் பள்ளிகள் நிறையும்  …

ஃபஜர் தொழுகையையே
மறந்தவர்கள் ..
ஃபஜர் தொழுகைக்கு
முண்டியடித்துக் கொண்டு
முதல் வரிசையில் நிற்பர்.

கடந்த ஆண்டில் மூடிவைக்கப்பட்ட திருக்குர்ஆன் மீண்டும் திறக்கப்படும் …

சக்காத்து, ஹதியா,பித்ரா என
தான தர்மங்கள் அனல் பறக்கும்.

கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சி சட்டிகள் புத்துணர்ச்சியோடு தன் பணியை தொடங்கும் .

கொத்துக் கறி போட்டு கொதிக்க,கொதிக்க  வீட்டில் கஞ்சி வைத்தாலும்
பள்ளி கஞ்சியின் சுவைக்கு
ஈடு இணை உலகில் உண்டா ?

வடை ,சமுசா ,வாடா மட்டுமே நோன்பு திறப்பில்
அங்கமாக இருந்த காலம் மாறிப்போனது.

விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தால்
ஜிகர்தண்டா,பழுதா, ஃப்ரூட் மிக்ஸர், முர்தபா ஆகியன முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கின.

இறைவா ….

முழுமையாக 30 நோன்புகளையும் நோற்கின்ற உடல் ஆரோக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாய் ரஹ்மானே ..

உன் திருவடி சேர்ந்த எம் மூதாதையர்களின் 
பிழை பொறுத்து சொர்க்கத்தை அருளி அருள்வாய் அல்லாஹ்வே ..

இந்த ஆண்டு சக்காத்து, பித்ரா, ஹதியா என  வாங்கிய கைகளை அடுத்த ஆண்டு கொடுக்கும் கைகள் ஆக்கு வல்லோனே …

உனது மாபெரும் கிருபையால் தொடங்கிய புதிய பள்ளியின் பணி சிறப்பாக முழுமைபெற
உன் பேரருளை பொழிந்திடுவாய் ரஹ்மானே ….

ஆமீன்… ஆமீன்… ஆமீன்…யாரப்பல் ஆலமீன் ..

ரமலான் நல் வாழ்த்துக்களுடன்…

K.N.M.முகம்மது இஸ்மாயில் ,
மதுக்கூர் ..03.04.2022.

கருத்து தெரிவியுங்கள்

Events
Ads
Shop
Directory
HR