நகைச்சுவை-Humour

இன்றைய கண்டுபிடிப்பு . .31.03.21.

இன்றைய கண்டுபிடிப்பு .   .31.03.21.

கருத்துச் சிதறல் ….

உறவுகளை முறித்துக் கொண்டு 
வாழ்பவன் சொர்க்கம் புக மாட்டான்….
நபிகள் நாயகம் …..

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது .
நபிகள் நாயகம் ..

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
திருவள்ளுவர் …

“சாமி கும்பிடுகிறேன்” என்று சொல். நான் தடுக்கவில்லை .
“கும்பிடுகிறேன் சாமி” என்று சொன்னால்
கண்டிப்பாக நான் தடுப்பேன்.
தந்தை பெரியார் …

நான் என்றால் சர்வாதிகாரம் …
நாம் என்றால் ஜனநாயகம் ..
கலைஞர் …..

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதரெல்லாம் மாறனும் …
வேலை செய்தால் உயர்வோம் என்கிற
நினைப்பு மண்டையில் ஏறனும் …
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ….

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?.
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை .
கவிஞர் வாலி .

நீ கொடுத்ததற்க்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்.
இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே
என் உள்ளம்.
யா அல்லாஹ் …சுபஹானல்லாஹ் .
நாகூர் சலீம் .(நாகூர் அனிபா பாடல்)


KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுகை நகைச்சுவை மன்றம் .

கருத்து தெரிவியுங்கள்