ஒரு நாள் பள்ளி ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
“புரோட்டாவை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்?”
“மட்டன் குருமாவில் ஊறவைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்” என்றான் ஒரு மாணவன்.
“சிறிது சிறிதாக பிய்த்துப் போட்டு சீனியை தூவி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்” என்றான் இன்னொரு மாணவன்.
“முட்டை ஆம்லெட்டுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”
“”ஆட்டுக்கால் பாயா சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்”
இப்படி பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.
இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, “புரோட்டாவை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்
மிகவும் நன்றாக இருக்கும்” என்று கூறினான்.
ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனைப் பாராட்டினார்.
மாணவர்களும் கரவொலி எழுப்பினர்… கரவொலி அடங்கவே வெகுநோரம் பிடித்தது..
அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவர் வேறு யாருமில்லை.
நான்தான்… நான் 1 வது படிக்கும் போது இது நடந்தது..
இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த ரகசியத்தை
சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் மனசு கேக்கலை….
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ..04.06.22.