இன்றைய கண்டுபிடிப்பு …(27.02.21)
எதிர்மறையாய் சூட்டப்படும் பெயர்கள் …
கொடும் விஷம் கொண்ட உயிர்க்கொல்லி பாம்பின் பெயர் “நல்லபாம்பு “.
120 கிலோ எடையுடன் குண்டாக உள்ள பெண்ணிற்கு சூட்டப்படும் பெயர் “சின்னப்பொண்ணு “.
வெறும் கவரிங் நகைகளை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு பெயர் “தங்க பொண்ணு “.
நமது திருமணங்களில் 25 கிராம் ஆட்டுக்கறியை மஞ்சள் கலர் கலந்த சோற்றோடு கலந்துவிட்டு அதற்கு வைக்கப்படும் பெயர் “மட்டன் பிரியாணி “.
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுகை நகைச்சுவை மன்றம்
இன்றைய கண்டுபிடிப்பு …(24.02.21).
(இன்றைய கண்டுபிடிப்பு 1980 வரை பொருந்தும் .அதன் பிறகு நிலைமை தலைகீழ்.இரண்டாவது வரி மட்டும் அன்றும் இன்றும் ஒன்றே )
அம்மா என்றால் அன்பு …
மனைவி என்றால் வம்பு …
மைத்துனர்கள் வந்தால் எடு கம்பு….
உடன் பிறந்தோர் என்றால் தெம்பு …
இது அத்தனையும் உண்மை நம்பு
அடுத்தது …
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்
ஒருவேளை ஒரே இனமாக இருக்குமோ ?
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுகை நகைச்சுவை மன்றம் .
(நல்லவேளை இந்தப் பதிவை நான் இடும் பொழுது என் மனைவி வீட்டில் இல்லை )
—————————————–
இன்றைய கண்டுபிடிப்பு….(21.02/21)
பள்ளிக்குச் சென்றால் பட்டினி போகும் ..
பாருக்கு (BAR)சென்றால் கிட்டினி போகும் .
KNM முகமது இஸ்மாயில் .
நகைச்சுவை சங்கம்
(சங்கம் என்ற உடன் தேர்தல் எப்போது என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள் )
இன்றைய கண்டுபிடிப்பு ..(22.02.21)
உங்களுக்கு சுகர் இல்லை என்று டாக்டர் சொன்னால் சந்தோஷப்படுக்கிறோம் …
அதையே ரேஷன் கடைக்காரர் சொன்னால்
கோபப்படுகிறோம் அது ஏன் ?
KNM முகம்மது இஸ்மாயில் .
நகைச்சுவை சங்கம் ..
(சங்கம் என்றவுடன் பல சங்கடமான கேள்விகள்
என்னிடம் கேட்கிறார்கள் ஆகவே நகைச்சுவை சங்கம் என்ற பெயர் மதுகை நகைச்சுவை மன்றம் என்று மாற்றப்படுகிறது )