கொளுத்தும் வெயிலில் கொஞ்சம் சிரிக்கலாமா ??
அப்பா : மகளே, முன்னாடி நீ என்னை அப்பானு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற?
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலஞ்சிடும் டாடி அதான்.
அப்பா : ???
*********************************************************************************
பக்தா என்ன வரம் வேண்டும் கடவுள் கேட்டார் .
தெய்வமே எனக்கு சாவே வரக்கூடாது …
வரம் கொடுத்தோம், நாளைமுதல் உனக்கு சாவே வராது ..
அடுத்த நாள் காலை ….
அவருடைய அடுத்த வீட்டுக்காரர் சாதிக்பாட்சா என்பவரை பெயர் சொல்லி அழைத்தார்.
ஆனால் அவர் வாயிலிருந்து “திக் பாட்” என்று மட்டுமே குரல் வெளியானது ..”சா” என்கிற எழுத்தை உச்சரிக்க இயலவில்லை .
கடவுள் தனக்குள் சிரித்துக் கொண்டார் :
மவனே என்கிட்டயா . ??. இனி உனக்கு “சா”வே வராது..
*********************************************************************************
யாஸ்மின் : எல்லா கல்யாணத்துக்கும் போயிப்போய் என் கணவருக்கு பைத்தியமே பிடிச்சிடிச்சின்னு நினைக்கிறேன்.
ரஹீமா : எப்படி சொல்ற ?
யாஸ்மின் : வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்தால் காக்காக்கும், குருவிக்கும் கல்யாணம்னு சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். உடனே MSA மண்டபத்திலேயா,
AKS மண்டபத்திலேயா என்று கேட்டு விட்டு கிளம்ப ரெடியாக ரெடியாகுறார்.
*********************************************************************************
உங்களை சிரிக்க வைக்க முயற்சிக்கும் ..
KNM.முகம்மது இஸ்மாயில் .
மதுக்கூர் ..10.08.21.