இன்றைய கண்டுபிடிப்பு …..
———————-
அவரவர் கவலைகள் ….
——————————————-
பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன என மாணவர்களுக்கு கவலை …
மட்டன் கிலோ 700 தாண்டிவிட்டது என்று மட்டன் பிரியர்களின் கவலை .
எளிமையான திருமணங்களால் மாலை சூடி, பந்தல் போட்டு,தப்ஸ் அடித்து ஊர்வலங்கள் நடத்த முடியவில்லையே என்று (ஜனாப்) லெப்பி சேட்டு அவர்களுக்கு கவலை.
துபாயிலிருந்து முடித்துக்கொண்டு அதிகம் பேர் தாயகம் திரும்புவதால் தாய்மார்களுக்கு கவலை .
நமது ஊரில் 60 வயதை கடந்தவர்கள் கூட தலை முடி, மீசை நரைக்காமல் இளமையோடு இருப்பதைப் பார்த்து சில பொறாமை மனிதர்களின் கவலை .(மை வேலை என்பது வேறு விஷயம்)
வெளியூர் பண்டாரிகளின் ஆக்கிரமிப்பால், உள்ளூர் பண்டாரிகளுக்கு கவலை ..
2,3 சீட்டுகள் மட்டும் வாங்குவதற்காகவா இத்தனை ஆண்டுகள் கூடி ஜால்ரா அடித்தீர்கள் என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கவலை.
நீயா ? நானா ? என்கிற போட்டி மற்றும் பொறாமை , உறவினர்களோடு நெருக்கம் இன்மை, எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற போக்கு , சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ளல் இவைகள் எல்லாம் நமது ஊரில் எப்போது மாறும் என்று பல நல்லவர்களின் (நான் உட்பட !!!!!!!!!!!!!) கவலை .
கவலை, கவலை,எதிலும் கவலை எல்லோருக்கும் கவலை, எனக்கும் ஒரு கவலை உண்டு. இந்தப் பதிவை படித்து விட்டு சிரிக்க போகிறார்களா ? சிந்திக்க போகிறார்களா ? அல்லது என்னை திட்ட போகிறார்களா ? என்று எனக்கு இமாலய கவலை .
குறிப்பு …
(ஜனாப்) “லெப்பி சேட்டு” :
திருமணங்களில் மாலை , பந்தல் , தப்ஸ் ஊர்வலம் ஆகிய ஏற்பாடுகளை சிறப்போடு செய்து கொடுக்கும் ஊர் அறிந்த, மதுக்கூர் வாசிகள் அனைவர்களோடும் நல்ல நேசம் பாராட்டுகின்ற சிறந்த மனிதர் .
பண்டாரிகள்:
திருமணங்களில் மிகப்பெரிய அளவில் சமையல் செய்யும் சமையல் கலைஞர்கள்
K.N.M.முகம்மது இஸ்மாயில் .
மதுகை நகைச்சுவை மன்றம்
09.03.2021